மதமாற்ற சட்டத்தை எதிர்த்து மதுரையில் மாநாடு

Subscribe to Oneindia Tamil

மதுரை:

கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை எதிர்த்து மதுரையில் இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் மாநாடு நடந்தது.

கட்சியின் அகில இந்திய தலைவர் இப்ராகிம் சுலைமான் சேட் மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். நெல்பேட்டைபகுதியிலிருந்து பேரணி தொடங்கி மாநாடு நடந்த மடீசியா அரங்கில் முடிவடைந்தது.

மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் நல்லக்கண்ணு, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்,புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

மாநாட்டில், கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று கோரி தீர்மானம்கொண்டு வரப்பட்டது. மேலும், காவிரி டெல்டாப் பகுதி விவசாயிகளுக்கு இலவச உணவு வழங்குவதற்குப் பதில்அரிசி வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சாத்தான்குளம் இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருவதாக தேசிய லீக் அறிவித்துள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+