For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களும் வறட்சி பாதித்தவையாக அறிவிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை தவிர்த்த அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும்பவானி ஆற்றின் குறுக்கே கேரளம் அணை கட்டுவதை தடுத்து நிறுத்துமாறு காவிரி நடுவர் மன்றத்திடம் தமிழகம் கோரிக்கைவிடுத்துள்ளது.

இதனை சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மூலம் தமிழக அரசு அறிவித்தது. இன்று எதிர்க் கட்சிகளின் வெளிநடப்புக்கு மத்தியில்ஆளுநர் ராம்மோகன் ராவ் அரசின் திட்டங்கள் அடங்கிய உரையை சட்டமன்றத்தில் வாசித்தார். அவர் கூறியதாவது:

தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. தென் மேற்குப் பருவமழையும், வட மேற்குப் பருவ மழையும்பொய்த்துவிட்டது.

இந் நிலையில் தமிழகத்துக்கு உரிய நீரைத் திறந்துவிடாமல் கர்நாடகம் பிடிவாதம் பிடித்தது. இதனால் காவிரி டெல்டாவேவறண்ட பூமியாக மாறிவிட்டது. கர்நாடகம் இப்போது திறந்துவிட்டுள்ள நீர் தமிழக சம்பாப் பயிரின் ஒரு பகுதியைப் பாதுகாக்கக்கூட உதவாது.

கர்நாடகம் விட்டுள்ள மிகக் குறைந்த நீரைக் கொண்டு பயிர்களை ஈரமாக்க கூட முடியாது. இதனால் கூடுதல் நீரை கர்நாடகம்திறந்துவிட வேண்டும். கண் முன்னே சம்பா பயிர்கள் கருகி விழுவதை வேதனையுடன் பார்த்துக் கொண்டு நிற்க வேண்டியசூழ்நிலையில் தமிழகம் உள்ளது.

இதனால் சென்னை தவிர்த்த அனைத்து மாவட்டங்களையும் மாநில அரசு வறட்சியால் பாதிக்கப்படட மாவட்டங்களாகஅறிவிக்கிறது.

இதுவரை வறட்சி பாதித்த பகுதிகளில் நிவாரண நடவடிக்கைகளுக்காக ரூ. 132 கோடியை அரசு செலவு செய்துள்ளது.விவசாயிகளுக்கு கோடை காலம் முழுவதும் இலவச உணவு வழங்கப்படும். இதற்காக 50,000 மெட்ரிக் டன் அரிசிஒதுக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்துக்குத் தேவைப்படும் 2 லட்சம் டன் அரிசியை மத்திய அரசு வழங்க வேண்டும். விவசாயிகளின்வங்கிக் கடன்களையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

வறட்சியால் விவசாயப் பணிகள் முழுமையாக நின்றுவிட்டதால் தமிழகம் முழுவதுமே மாற்று வேலைத் திட்டங்கள்அமலாக்கப்படும்

தமிழகத்தின் வறட்சி தேசியப் பேரிழப்பாகக் கருதப்பட வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகளுக்குமத்திய அரசு தலா ரூ. 5,000 வழங்க வேண்டும். இதற்காக மத்திய அரசு ரூ. 400 கோடி சிறப்பு நிதியை ஒதுக்கித் தர வேண்டும்.

10வது ஐந்தாண்டுத் திட்டத்துக்கு முன்னதாகவே மகாநதியையும் காவிரியையும் இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணைக் கட்டுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கேரள அரசுக்கு தமிழகம் கடிதம் எழுதியுள்ளது.

மேலும் இந்த விவகாரத்தில் தலையிட்டு கேரளத்தின் அணைத் திட்டத்தைத் தகுக்குமாறு காவிரி நடுவர் மன்றத்திடமும்முறையிடப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆளுநரின் உரையில் கூறப்பட்டிருந்தது.

ஆளுநரின் உரையை அதிமுக எம்.எல்.ஏக்களும் அவர்களை ஆதரிக்கும் த.மா.கா.கா. எம்.எல்.ஏக்களும் மேஜைகளைத் தட்டிவரவேற்றனர்.

அரசுக்குப் பாராட்டு:

உரையை வாசித்த ஆளுநர் இடையிடையே தமிழக அரசைப் பாராட்டினார். விவசாயிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில்தமிழக அரசு கொண்டு வந்துள்ள இலவச மதிய உணவுத் திட்டத்துக்குத் தனிப்பட்ட முறையில் பாராட்டுத் தெரிவிப்பதாகக் கூறியஆளுநர் பட்டினியில்லா தமிழகத்தை உருவாக்குவதில் இந்த அரசு காட்டி வரும் அக்கறையை வரவேற்கிறேன் என்றார்.

பேக் பெஞ்ச்:

கடந்த கூட்டத் தொடரில் முன் வரிசையில் அமைச்சர்களாக வீற்றிருந்த தம்பிதுரையும் தளவாய் சுந்தரமும் இந்த முறை பதவிகாலியானதால் இரண்டாவது வரிக்ைகுத் தள்ளப்பட்டனர்.

󠣰 PQug ٶPlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X