மாறன் உடல் நிலை மீண்டும் கவலைக்கிடம்
டெல்லி:
அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் மத்திய தொழில் துறை அமைச்சர் முரசொலி மாறனின் உடல்நிலை மீண்டும்மோசமடைந்துள்ளது.
செயற்கை இருதய வால்வில் ஏற்பட்ட பூஞ்சைத் தொற்று காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் மாறனின்உடல்நிலை மோசமடைந்தது. பூஞ்சைத் தொற்று ரத்தத்தில் கலந்து விட்டதால் அவருடைய சிறுநீரகம், கல்லீரல்மற்றும் நுரையீரல் ஆகியவை பாதிக்கப்பட்டன.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.ஆனாலும் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே அவர் வைக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக மாறனை அமெரிக்காவுக்குக் கொண்டு செல்ல மத்திய அரசு முன் வந்தது.சிங்கப்பூரிலிருந்து கொண்டுவரப்பட்ட சிறப்பு ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் அவர் அமெரிக்காவிற்குக்கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு ஹூஸ்டன் நகரில் உள்ள புகழ்பெற்ற மெதாடிஸ்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாறன் தொடர்ந்துசிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில வாரங்களாக அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்காணப்பட்டது.
இந்நிலையில் நேற்றிரவு மாறனின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. அவர் கவலைக்கிடமான நிலையிலேயேஉள்ளதாக மெதாடிஸ்ட் மருத்துவமனை டாக்டர்கள் கூறுகின்றனர்.
மாறனின் உடல் நிலை குறித்து பிரதமர் வாஜ்பாய்க்கும், திமுக தலைவர் கருணாநிதிக்கும் அவ்வப்போது தகவல்தெரிவிக்கப்பட்டு வருகிறது.
-->


