For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெல்லை மாவட்ட செயலாளர் நீக்கம்: வைகோ அதிரடி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுகவுடன் அணி சேருவதை எதிர்த்தும் சாத்தான்குளத்தில் போட்டியிடப் போவதில்லை என்ற மதிமுகவின் முடிவைஎதிர்த்தும் கருத்துத் தெரிவித்த அக்கட்சியின் திருநெல்வேலி மாவட்ட செயலாளர் டி.ஏ.கே. லட்சுமணன்சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

வைகோவை கருணாநிதி சிறையில் சந்தித்தது முதல் திமுகவுடன் மதிமுக நெருங்க ஆரம்பித்துவிட்டது. பிரிந்து வந்தகட்சியுடன் போய் மீண்டும் ஒட்டுவதா என மதிமுகவுக்குள் எதிர்ப்புக் குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன.

இந் நிலையில் சாத்தான்குளம் இடைத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக திமுக அறிவித்ததைத் தொடர்ந்துமதிமுகவும் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தது.

இதற்கும் மதிமுகவுக்குள் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. குறிப்பாக நெல்லை மாவட்டச் செயலாளர் லட்சுமணன்தலைமையில் ஒரு பிரிவினர் வைகோவின் இந்த முடிவுக்குக் கண்டனம் தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகிகளுடன்கலந்து ஆலோசிக்காமல் எப்படி முடிவு அறிவிக்கலாம் என்று வைகோவுக்கு எதிராக இவர்கள் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து லட்சுமணனை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்து வைகோ உத்தரவிட்டுள்ளார். மேலும் திமுகதலைவர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேட்டியளித்தது குறித்து விளக்கம் அளிக்குமாறும் அவருக்கு நோட்டீஸ்அனுப்பப்பட்டுள்ளது.

பொடா சட்டத்தின் கீழ் முதல்வர் ஜெயலலிதா தன்னைக் கைது செய்ததை பா.ஜ.க. மறைமுக ஆதரித்ததுவைகோவை கடுப்படையச் செய்துவிட்டது. இதனால் சமீப காலமாகவே பா.ஜ.கவை எதிர்ப்பதில் கருணாநிதியுடன்கைகோர்த்துள்ளார்.

கருணாநிதியின் கருத்துக்களுக்கு ஆதரவாக சிறையில் இருந்தவண்ணம் வைகோ அறிக்கைகள் வெளியிட்டுவருகிறார். வைகோவின் கைதைக் கண்டித்து மதிமுகவினர் நடத்திய கையெழுத்து இயக்கத்தை கருணாநிதியேதொடங்கி வைத்து இரு கட்சிகளின் உறவில் புதிய சகாப்தத்த்ை தொடங்கி வைத்தார்.

இந்த நெருக்கத்தை மதிமுகவினர் அனைவரும் ரசிக்கவில்லை. "திமுகவை எதிர்த்துதான் கட்சி ஆரம்பித்தோம்,தற்போது அந்தக் கட்சியிடமே சென்று அடைக்கலம் ஆவதா?", அப்புறம் தனிக் கொடி எதற்கு? தனிக் கட்சிதான்எதற்கு?" என்று மதிமுகவின் முக்கியப் பிரமுகர்கள் பலரும் குமுறிக் கொண்டுள்ளனர்.

இதில் லட்சுமணன் வெளிப்படையாகவே கருத்துத் தெரிவித்தால் அவர் உடனடியாக சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்ட செயலாளர், ஆட்சிமன்றக் குழு உறுப்பினர், கட்சியின் அடிப்படைஉறுப்பினர் ஆகிய அனைத்துப் பொறுப்புகளிலுமிருந்தும் லட்சுமணன் நீக்கப்பட்டுள்ளார்.

கொ.ப.செ. திடீர் கைது:

இதற்கிடையே முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி மதிமுகவின் கொள்கை பரப்புச்செயலாளரான நாஞ்சில் சம்பத்தை போலீசார் நேற்று நள்ளிரவு அதிரடியாகக் கைதுசெய்தனர்.

வியாசர்பாடி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் நேற்று இரவு நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார்.கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு அவர் திரும்பிக் கொண்டிருந்தபோது வியாசர்பாடி பாலம் அருகே போலீஸார்அவரது காரைத் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி சம்பத்தைக் கைது செய்து தங்களது வாகனத்தில் ஏற்றிஅழைத்துச் சென்றனர். நாஞ்சில் சம்பத் நேராக பூக்கடை காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அவர் கைது செய்யப்பட்டது குறித்து அறிந்த மதிமுக தொண்டர்கள் நள்ளிரவு நேரத்திலேயே சாலை மறியல்செய்ய முயன்றனர். ஆனால் அவர்களை போலீஸார் லேசான தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

நாகர்கோவிலில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாகக் கூறி நாஞ்சில் சம்பத்தின் வீட்டை அந்நகராட்சி நிர்வாகம்கடந்த மாதம் அரசு இடித்துத் தரைமட்டமாக்கியது நினைவுகூறத்தக்கது.

"நாக்கறுக்கும் செயல்"- கருணாநிதி:

இதற்கிடையே நாஞ்சில் சம்பத் கைதுக்கு கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை விவரம்:

எதிர்க்கட்சித் தலைவர்கள் குறித்து அதிமுகவினர் ஆபாசமாகவும், அவதூறாகவும் விமர்சிக்க பரிபூரணஉரிமைகளையும் சுதந்திரத்தையும் அதிமுக அரசு வழங்கியுள்ளது.

ஆனால் ஆளுங்கட்சித் தலைவர்களின் முறைகேடுகளை உரிய முறையில் விமர்சனம் செய்வதற்குத் தடைவிதிக்கிறது இந்த அரசு. ஆளுங்கட்சியினரை விமர்சிக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களின் நாக்குகளைஅறுப்பதையே இந்த அரசு லட்சியமாகக் கொண்டுள்ளது.

எதிர்க்கட்சிகளுக்கு விமர்சிக்கும் உரிமை இல்லை என்பதையே நாஞ்சில் சம்பத் கைது சம்பவம் காட்டுகிறது என்றுகூறியுள்ளார் கருணாநிதி.

வாஜ்பாயிடம்...

இதற்கிடையே வைகோவின் கைதை எதிர்த்து தமிழகத்தில் நடத்தப்பட்ட ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நேற்றுமுடிவடைந்தது.

ஒரு கோடி பேருக்கும் அதிகமானோரிடம் கையெழுத்துக்களைப் பெற்ற மதிமுக, நேற்று அந்தப் படிவத்தைபிரதமர் வாஜ்பாயிடம் அளித்தது.

󠣰 PQug ٶPlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X