For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டமன்றம் கூடியது: திமுக தலைமையில் அனைத்து எதிர்க் கட்சிகளும் வெளிநடப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக சட்டமன்றக் கூட்டம் இன்று பெரும் பரபரப்புடன் தொடங்கியது. விவசாயிகளின் மரணங்களைத் தடுக்க அரசுதவறிவிட்டதாகக் கூறி திமுக தலைமையில் அனைத்து எதிர்க் கட்சிகளும் வெளிநடப்பு செய்தன.

அதிமுகவை ஆதரிக்கும் பா.ஜ.க மற்றும் காங்கிரசை உடைத்து உருவாக்கப்பட்ட தமிழ் மாநில காமராஜ் காங்கிரஸ் ஆகியகட்சிகளின் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பில் பங்கேற்கவில்லை.

தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட்டுக்கு முந்தைய குறுகிய காலக் கூட்டத் தொடர் இன்று காலை கூடியது. இந்த ஆண்டின் முதல்கூட்டம் என்பதால் ஆளுநர் ராம்மோகன் ராவ் உரையாற்ற வந்தார். அவரை முதல்வர் ஜெயலலிதாவும் சபாநாயகர் காளிமுத்துவும்வரவேற்று அழைத்து வந்தனர்.

தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான திட்டங்கள் அடங்கிய உரையை ராம்மோகன் படிக்க எழுந்தார்.

திமுக நிலை:

அப்போது எழுந்த எதிர்க் கட்சித் தலைவரான அன்பழகன் கூறியதாவது:

ஆளுநர் அவர்களே, தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. இதைச் சமாளிக்க இந்த அரசு முழுமையாக தவறிவிட்டது. இதனால்விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். அவர்களது உயிர்களையும் பயிர்களையும் காக்க வேண்டிய இந்த அரசு கையில்தட்டு கொடுத்து அவர்களை பிச்சைக்காரர்கள் போல நடத்தி வருகிறது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களையும் வறட்சி பாதித்தவையாக அரசு அறிவிக்க வேண்டும். எல்லா விஷயத்திலும்எடுத்தேன் கவிழ்த்தேன் என காட்டாட்சி நடத்தி வரும் இந்த அரசைக் கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.

அன்பழகனின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் குரல் எழுப்பினர். பதிலுக்கும் எதிர்க் கட்சியினரும்கத்தினர்.

காங்கிரஸ்:

அடுத்து எழுந்த காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் கூறியதாவது:

மாநிலத்தில் நிலவி வரும் கடும் வறட்சியை இந்த அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. இந்த அரசு முழுத் தோல்விஅடைந்துவிட்டது. உயிரிழந்த விவசாயிகள் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். மற்றவிவசாயிகளுக்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும்.

ஒழுங்காக கர்நாடகத்துடன் பேசி நீரைப் பெற ஜெயலலிதா முயல வேண்டும். சாத்தியமே இல்லாத புதிய வீராணம் திட்டம் என்றபெயரில் பணத்தை வீணடிப்பதை அரசு தவிர்க்க வேண்டும் என்றார்.

அதே போல பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. ஹேமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.பழனிச்சாமி ஆகியோரும் அதிமுக அரசை கடுமாையகத் தாக்கிப் பேசினர். இதை கடுகடுப்புடன் முதல்வர் ஜெயலலிதா பார்த்துக்கொண்டிருந்தார்.

வெளிநடப்பு:

இவர்களை எதிர்த்து அதிமுக எம்.எல்.ஏக்கள் எதிர்த்து குரல் எழுப்ப எதிர்க் கட்சி எம்.எல்.ஏக்களும் எதிர்ப்புக் குரல்எழுப்பிவிட்டு வெளிநடப்பு செய்தனர். அன்பழகன் தலைமையில் திமுக முதலில் வெளிநடப்பு செய்ய, தொடர்ந்து காங்கிரஸ்,பா.ம.க., மார்க்சிஸட்கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களும் வெளியேறினர்.

அதிமுகவை எப்போதும் ஆதரித்து வரும் பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் இந்த வெளிநடப்பில் கலந்து கொள்ளவில்லை. அதே போலகுமாரதாஸ் தலைமையில் உருவாகியுள்ள போட்டி த.மா.காவும் வெளிநடப்பில் பங்கேற்கவில்லை.

எதிர்க் கட்சியினர் அனைவரும் கோஷம் போட்டபடியே வெளியேறிய பின்னர் ஆளுநர் ராம்மோகன் ராவ் தனது உரையைப்படிக்க ஆரம்பித்தார்.

பா.ம.க:

தனது கட்சி எம்.எல்.ஏக்களுடன் வெளிநடப்பு செய்த பின்னர் நிருபர்களிடம் பேசிய பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, தமிழகத்தில்கூலி வேலை கூட இல்லாமல் மக்கள் அண்டை மாநிலங்களுக்கு பிழைப்புத் தேடி போகும் நிலை வந்துவிட்டது. நத்தை, நண்டு,எலிகளைத் தேடித் தேடி சாப்பிடும் வேதனையான நிலை வந்துவிட்டது. இதற்காக அரசு வெட்கப்பட வேண்டும். மேலும், அரசுஅறிவித்த இலவச உணவுத் திட்டத்தை 1 சதவீத விவசாயிகள் கூட ஆதரிக்கவில்லை என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்:

மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. ஹேமச்சந்திரன் கூறுகையில், விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும், கந்து வட்டிக்கும்பலை ஒழிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசிடம் உதவி கிடைக்க வேண்டும். இந்த விஷயங்கள்எல்லாம் ஆளுநர் உரையில் இடம் பெற வேண்டும் என்று கோரி வெளிநடப்பு செய்துள்ளோம்.

இந்திய கம்யூனிஸ்ட்:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ. பழனிச்சாமி கூறுகையில், தூங்குபவனை எழுப்பிவிடலாம். ஆனால், தூங்குவதிமாதிரி நடிக்கும் இந்த அரசை எழுப்பிவிட முடியாது. கிட்டத்தட்ட 10 விவசாயிகள் செத்துவிட்ட நிலையில் காவிரி டெல்டாபகுதிக்கு இதுவரை ஒரு அமைச்சர் கூட எட்டிப் பார்க்கவில்லை. அப்புறம் எதற்கு இந்த 27 அமைச்சர்களும் இருக்கிறார்கள் என்றுதெரியவில்லை. இதனால் அரசைக் கண்டித்து வெளியே வந்துவிட்டோம் என்றார்.

விடுதலைச் சிறுத்தைதள்:

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறுகையில், தொடர்ந்து எதிர்க் கட்சிகளை பழிவாங்கும் வேலையைத் தான்இந்த அரசு ஒழுங்காக செய்து வருகிறது. மற்றபடி பொடா, மத மாற்றத் தடைச் சட்டம் என மக்கள் விரோத சட்டங்களைத் தான்இந்த அரசு அமலாக்கி வருகிறது. இப்போது விவசாயிக்கே உணவில்லாத நிலை தமிழகத்தில் உருவாகிவிட்டது. யாருக்கும்நல்லது செய்யாத இந்த அரசைக் கண்டித்து வெளிநடப்பு செய்தேன் என்றார்.

அன்பழகன்:

வெளிநடப்பு செய்த எதிர்க் கட்சித் தலைவர் அன்பழகன் வெளியே நிருபர்களிடம் பேசுகையில், வரும்முன் காப்போம் என்றவகையில் காவிரி ஆணையத்துடனும் அதன் தலைவர் பிரதமர் வாஜ்பாயுடனும் கர்நாடக அரசுடனும் உரிய முறையில் பேசிநீரைப் பெற ஜெயலலிதா தவறினார். இதனால் தினந்தோறும் விவசாயிகளின் பிணங்கள் விழுந்து வருகின்றன. இதனால் தான்வெளிநடப்பு செய்தோம் என்றார்.

󠣰 PQug ٶPlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X