மகாத்மாவை கொச்சைப்படுத்தும் அமெரிக்க பத்திரிக்கை
வாஷிங்டன்:
அமெரிக்காவின் மேக்சிம் என்ற பத்திரிக்கை மகாத்மா காந்தியை மிகவும் கொச்சைப்படுத்தி கட்டுரையும் கார்ட்டூன்களையும்வெளியிட்டுள்ளது. இதற்கு இந்தியர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
மேக்சிம் என்ற செக்ஸ் இதழில் இந்த கேவலமான 21 கார்ட்டூன்கள் வெளியாகியுள்ளன.
வெளி நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் கட்டிப் புரண்டு சண்டை போடுவதன் மூலம் உடலை மிகவும் கட்டுக் கோப்பாகவைத்திருக்க முடியும் என்ற அர்த்தத்தில் எழுதப்பட்டுள்ள ஒரு கட்டுரையில் மகாத்மா காந்தி அடி வாங்குவது மாதிரியும், அவர்தூக்கி எறியப்படுவது போன்றும், உதைக்கப்படுவது போன்றும் கார்ட்டூன்கள் வரையப்பட்டுள்ளன.
"ட, இச்டூஞிதணாணாச்: கூடணூஞுஞு ணூஞுச்ண்ணிணண் ணாணி ஏச்ணாஞு.... எச்ணஞீடடி" என்ற தலைப்பில் 2000ம் ஆண்டிலும் இதே போன்ற கட்டுரைவெளியானது.
மகாத்மாவைத் தொடர்ந்து கொச்சைப்படுத்தும் வரும் அந்தப் பத்திரிக்கை மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்குத் தொடர பலஅமைப்புகளும் திட்டமிட்டுள்ளன. இன ரீதியில் இந்தியர்களைப் புண்படுத்தும் மட்டமான செயல் இது என வாஷிங்டனில் உள்ளமகாத்மா காந்தி கல்வி மையத்தைச் சேர்ந்த மிச்சேல் நியாப் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், பிறருக்காக தன்னை வருத்திக் கொண்ட காந்தியடிகளின் வாழ்க்கையையே உணராத கும்பல் தான் இச்செயலைச் செய்ய முடியும் என்றார்.
கலிபோர்னியாவில் உள்ள ஆசிய-பசிபிக் மக்கள் கூட்டணியின் தலைவர் மைக்கேல் மட்சுடா கூறுகையில், செப்டம்பர் 11தாக்குதலுக்குப் பின் வெளிநாட்டவர்களைத் கேவலமாக நடத்தும் போக்கு அமெரிக்காவில் அதிகரித்துள்ளது. இந் நிலையில்ஆசியர்களைத் தாக்குங்கள் என்ற அர்த்தத்தில் தான் இந்தக் கட்டுரை வெளியாகியுள்ளதாகக் கருத முடிகிறது என்றார்.
இரு மாதங்களுக்கு முன்பு தான் தனது ஆசிய பதிப்பை இந்தப் பத்திரிக்கை தொடங்கியது. இந் நிலையில் ஆசியா கண்டம்உருவாக்கிய மிகப் பெரிய மகானை கேவலப்படுத்தி கட்டுரை வெளியிட்டுள்ளது.
-->


