நெய்வேலி அனல் மின் நிலையத்தில் திடீர் தீ: மின் உற்பத்தி பாதிப்பு
கடலூர்:
நெய்வேலி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு மின் உற்பத்திபாதிக்கப்பட்டுள்ளது.
210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் முதல் யூனிட்டின் ஒரு பிரிவில் பழுப்பு நிலக்கரியைச் சுமந்து செல்லும்கன்வேயர் பெல்ட்டில் நேற்றிரவு தீ பிடித்துக் கொண்டது.
இந்தத் தீ மளமளவென சில கருவிகளுக்கும் பரவியது. தீயணைப்பு வீரர்களும், மத்திய தொழில் பாதுகாப்புப்படையினரும் சேர்ந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இத் தீ விபத்தில் சுமார் 1 டன் எடையுள்ள நிலக்கரி எரிந்து சாம்பலானது. மேலும் கன்வேயர் பெல்ட்டும்முழுவதுமாக எரிந்து போனது. இதனால் ரூ. 2 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டது.
தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. மேலும் இந்த விபத்து காரணமாக நெய்வேலி முதலாம் யூனிட்டில் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமையை சரியாக நான்கு நாட்களுக்கு மேல் ஆகும் என்று தெரிகிறது.
தீப்பிடித்துக் கொண்ட இந்த மின் உற்பத்திப் பிரிவை கடந்த மாதம்தான் நிலக்கரிச் சுரங்கத் துறை அமைச்சர் உமாபாரதி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


