• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொலம்பியா ராக்கெட் வெடித்துச் சிதறியது: கல்பனா உள்பட 7 வீரர்கள் பலி

By Staff
|

Kalpana Chawlaவாஷிங்டன்:

இந்தியாவைச் சேர்ந்த கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 விண்வெளி வீரர்களுடன் பூமிக்குத் திரும்பிக் கொண்டிருந்த ஸ்பேஸ் ஷட்டில்கொலம்பியா ராக்கெட் வெடித்துச் சிதறியது. இதில் 7 வீரர்களும் உயிரிழந்தனர்.

அமெரிக்க நேரப்படி காலை 9.40 மணிக்கு அது புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் தரையிறங்குவதாக இருந்தது.விண்ணில் இருந்து 20,112 கி.மீ. வேகத்தில் (ஒலியை விட பல மடங்கு வேகம் இது) பூமியை நோக்கி தரையிறங்கிக் கொண்டிருந்த அந்தராக்கெட் டெக்ஸஸ் மாகாணத்தின் மீது பறந்து கொண்டிருந்தபோது வெடித்துச் சிதறியது.

தரையிலிருந்து 2,00,700 அடி உயரத்தில் இந்த விபத்து ஏற்பட்டது.

கல்பனா சாவ்லா:

இதில் 7 விண்வெளி வீரர்களுமே பலியாகிவிட்டனர். 16 நாட்கள் விண்ணில் இருந்த இந்தக் கலம் 80க்கும் அதிகமான ஆராய்ச்சிகளில்ஈடுபட்டது. இதில் இந்தியாவைச் சேர்ந்த கல்பனா சாவ்லா (வயது 42) உள்ளிட்ட 7 பேர் இருந்தனர்.

கல்பனாவுக்கு இது இரண்டாவது விண்வெளிப் பயணமாகும். 5 ஆண்டுகளுக்கு முன் 1997ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி கல்பனாவிண்ணுக்குச் சென்றார். விண்ணுக்குச் சென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையும் நாட்டுக்குத் தேடித் தந்தார்.

பலியான கல்பனா சாவ்லா ஹரியாணா மாநிலம் கர்னாலில் பிறந்தவர். பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிகல்இன்ஜினியரிங்கில் பட்டம் பெற்ற இவர் பின்னர் ப்ளூயிட் டைனமிக்ஸ் படிப்பில் உயர் கல்வி பெற அமெரிக்கா சென்றார். டெக்ஸஸ்பல்கலைக்கழகத்தில் மாஸ்டர்ஸ் பட்டம் பெற்ற இவர் பின்னர் கொலராடோ பல்கலைக்கழகத்தில் விண்வெளி ஆராய்ச்சியை முடித்தார்.

ஆராய்ச்சிக் கல்வியை முடித்த இவரை 1994ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா விண்வெளி வீரராகத்தேர்வு செய்தது.

விண்வெளியில் நடப்பது தொடர்பான ஆராய்ச்சிக்கு வேண்டிய சாப்ட்வேரை உருவாக்குவதிலும் இவர் பங்கு வகித்தார்.

The crew of Space Shuttle Columbiaஇஸ்ரேலிய வீரரால் பாதுகாப்பு பிரச்சனை:

இஸ்ரேலைச் சேர்ந்த இலான் ரமோன் என்பவரும் இந்த ராக்கெட் இருந்தார். இஸ்ரேலிய வீரர் முதன்முதலில் விண்ணுக்குச் சென்றதால் இதைஇஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்கலாம் என்று அஞ்சப்பட்டது. இதனால் இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் தேதி மிக ரகசியமாகவைக்கப்பட்டு கடந்த மாதம் 16ம் தேதி திடீரென விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

அதே போல இன்று தரையிறங்கும் நேரமும் கூட ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. தரையிறங்க 40 நிமிடங்கள் இருந்த நிலையில் அதுதரைக் கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பை இழந்தது.

இதையடுத்து அமெரிக்க விண்வெளி மையம் அவசர நிலையைப் பிரகனடப்படுத்தியது. கொலம்பியா ராக்கெட்டைத் தேடி விமானப் படைவிமானங்கள் விண்ணில் பாய்ந்தன.

ஆனால், டெக்ஸஸ் மாகாண விண்வெளியில் ராக்கெட்டின் பாகங்கள் வெடித்துச் சிதறிய வண்ணம் கீழே விழுந்தன. டல்லாஸ்- போர்ட்வொரத் பகுதியிலும் இந்த பாகங்கள் விழுந்தன. கொலம்பியா வெடித்துச் சிதறியபோது இந்தப் பகுதிகளில் பல வீடுகளும் அதிர்ந்தன.

அதிக உயரத்தில் பறந்தது:

தரையிறங்குவதற்கு தேவையான உயரத்தை விட மிக அதிகமான உயரத்தில் கொலம்பியா பறந்தாகக் கூறப்படுகிறது. தரையை நோக்கி அதுமிக வேகமாக பாய்ந்ததாகவும் வேகத்தைக் கட்டுப்படுத்த விண்வெளி வீரர்கள் மிக அவசரமாக பல நடவடிக்கைகளை எடுத்தாதாகவும்தெரிகிறது.

ராக்கெட்டை இடது, வலது புறமாக அவர்கள் திருப்பியுள்ளனர். இந்த விவரங்கள் கென்னடி விண்வெளி மையத்தில் பதிவாகியுள்ளன. மிகபயங்கரமான வேகத்தில் விண்வெளிக் கலத்தை இவ்வாறு அதிர்வுக்கு உள்ளாக்கியதால் அது வெடித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ராக்கெட்டின் பாகங்கள் கிடந்தால் அதைத் தொட வேண்டாம் எனவும் உடனே போலீசாருக்குத் தகவல் தருமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Shuttle Columbia while lifting off on Jan. 16கிளம்பியபோதே பிரச்சனை:

பூமிக்குத் திரும்ப இருந்த விண்வெளி வீரர்களின் குடும்பத்தினர் கென்னடி விண்வெளி தளத்தில் கூடியிருந்தனர். விண்கலத்தில் அந்தவீரர்கள் தரையிறங்கத் தயாராகிக் கொண்டிருந்ததை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அந்த வீரர்கள் இடையே பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. இந் நிலையில் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடன்தொடர்பு துண்டிக்கப்பட்டது. அடுத்த நிமிடங்களில் டெக்ஸாஸ் மீது விண்வெளிக் கலத்தின் பாகங்கள் வெடித்துச் சிதறியவண்ணம்விழுந்தன.

கடந்த மாதம் 16ம் தேதி இந்த விண்வெளிக் கலம் பறக்க இருந்த சில நிமிடங்களுக்கு முன் எரிபொருளைச் செலுத்தும் டியூப் பிடுங்கிக்கொண்டது. இந்த டியூப் ராக்கெட்டின் இடது இறக்கையில் ஒட்டிக் கொண்டது.

ஆனால், இது பெரிய அளவில் பாதுகாப்புக்கு பிரச்சனை ஏற்படுத்தாது என்பதால் ராக்கெட் ஏவப்பட்டது. இப்போது இதனால் ஏதாவதுபிரச்சனை ஏற்பட்டிருக்குமோ என்றும் கருதப்படுகிறது.

2வது பெரும் விபத்து:

17 ஆண்டுகளுக்கு முன் 1986ம் ஆண்டு ஜனவரியில் நடந்த சேலஞ்சர் ராக்கெட் விபத்துக்குப் பின் இது தான் மிகப் பெரிய விண்வெளிவிபத்தாகும். சேலஞ்சர் ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும்போதே வெடித்துச் சிதறிவிட்டது. அதில் இருந்த 7 வீரர்களும் பலியாயினர்.

42 ஆண்டு கால விண்வெளி வரலாற்றில் இதுவரை எந்த ராக்கெட்டையும் மனிதர்களுடன் சேர்த்து தரையிறங்கும்போது அமெரிக்காவோ,ரஷ்யாவோ இழந்தது இல்லை.

நொடிக்கு 8 கி.மீ. வேகம்!!

இந்த விபத்துக்கு பலவிதமான காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில் விண் கலத்தின் வெப்ப நிலை மிக அதிகமாக உயர்ந்தது தான்விபத்துக்குக் காரணம் என பி.பி.சிக்கு அளித்த பேட்டியில் விண்வெளி ஆராய்ச்சியாளர் டேவிட் வேட் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், நொடிக்கு 8 கி.மீ வேகத்தில் அதி பயங்கர வேகத்தில் விண்வெளிக் கலம் பறக்கும்போது மிக அதிமான அதிர்வுகள்உண்டாகும். அப்போது விண்கலத்தின் வெளிப்புறத்தில் கிட்டத்தட்ட 12,000 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலை உருவாகும். இந்த வெப்பநிலையைச் சமாளிக்க அதிக சக்தி கொண்ட தெர்மல் இன்சுலேசன் கோட்கள் விண்கலத்தின் வெளிப்பகுதியில் உள்ளன.

ஆனால், வெப்ப நிலை மிக அதிகமாக உயர்ந்தால் அந்த இன்சுலேசன் சிதைந்து பின்னர் ஒட்டுமொத்த விண்கலமும் வெடித்துச்சிதறியிருக்கலாம் என அவர் தெரிவித்தார்.

மிக அதிகமான வேகத்தில், மிக அதிகமாக உயரத்தில் இருந்ததால் பாராசூட் மூலம் கூட எந்த வீரரும் தப்பியிருக்க வாய்ப்பில்லை என்றும்அவர் கூறினார்.

தீவிரவாதிகள் தாக்குதல் இல்லை:

இந் நிலையில் இந்த விபத்தில் தீவிரவாதிகள் கைவரிசை ஏதும் இல்லை என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. ராக்கெட்டை விண்ணில்இந்த மிக அதிகமான உயரத்தில் தாக்க ஏவுகணைகளால் முடியாது என அமெரிக்கா கூறியுள்ளது.

இச் சம்பவம் நடந்தபோது அதிபர் புஷ், கேம்ப் டேவிட்டில் ஓய்வில் இருந்தார். தகவல் அறிந்தவுடன் அவர் உடனே வாஷிங்டனுக்குத்திரும்பினார்.

1988ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஸ்பேஸ் ஷட்டில் கொலம்பியா இதுவரை 27 முறை விண்ணுக்குச் சென்று பத்திரமாகத் திரும்பியுள்ளது.28வது முறை விபத்தில் சிக்கிக் கொண்டது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் பழையதாகிவிட்டதும் கூட விபத்துக்கு காரணமாக இருந்திருக்கும்என்றும் கூறப்படுகிறது.

வெப்பமும் ரேடியோ தொடர்பும்:

வழக்கமாக விண்வெளிக் கலம் பூமிக்குத் திரும்பும்போது மிக அதிக வெப்ப நிலையை எட்டும்போது ரேடியோ அலைகள் பாதிக்கப்படும்.இதனால் விண்கலத்துக்கும் பூமியில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் இடையிலான தொடர்பு சுமார் 10 நிமிடங்கள்பாதிக்கப்படும்.

பூமிக்குள் நுழைந்த பின்னர் தான் மீண்டும் ரேடியோ தொடர்பு ஏற்படும். இந்தமுறையும் முதலில் இது வழக்கமான தொடர்பு துண்டிப்புஎன்று தான் நாஸா அதிகாரிகள் கருதினர். ஆனால், நேரம் கடந்து கூட மீண்டும் தொடர்பு கிடைக்காததால் தான் ஏதோ அசம்பாவிதம்நடந்துவிட்டது உணரப்பட்டது.

இந் நிலையில் டெக்ஸஸ் வான் பகுதியில் விண்வெளிக் கலம் பறக்கும்போது படம் பிடிக்கக் காத்திருந்த ஒரு தொலைக்காட்சியின் வீடியோநிருபர் கொலம்பியா ராக்கெட் வெடித்துச் சிதறி தரையில் விழுவதைப் படம் பிடித்தார். இதையடுத்து இந்த விபத்து உறுதியானது.

இந்தியாவில் சோகம்:

அமெரிக்க ராக்கெட் விபத்தில் இந்திய வீராங்கனை கல்பனா சாவ்லா மரணமடைந்ததையடுத்து இந்தியாவில் சோகம் பரவியுள்ளது.

டெல்லியிலும் பஞ்சாபிலும் உள்ள கல்பனாவின் உறவினர்கள் இச் சம்பவம் குறித்து அறிந்தவுடன் கதறி அழுதனர். கல்பனா விண்ணுக்குச்செல்வதைப் பார்க்க அவரது அண்ணன் சஞ்சய் சாவ்லா மற்றும் அவரது குடும்பத்தினர் சிலர் அமெரிக்கா சென்றனர்.

கல்பனா தரையிறங்குவதைப் பார்க்க இன்றும் அவர்கள் கென்னடி விண்வெளித் தளத்தில் காத்திருந்தனர்.

சம்பவம் குறித்து அறிந்தவுடன் டெல்லி கேல் காவ்ம் பகுதியில் உள்ள கல்பனாவின் வீட்டுக்கு அவரது உறவினர்களும் பொது மக்களும்குவிந்துள்ளனர்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X