லாட்டரிக்கு தமிழக அரசு தடை விதித்தது சரியே: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
டெல்லி:
தமிழகத்தில் லாட்டரிச் சீட்டுகள் விற்பனைக்குத் தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டது சரியே என்று உச்சநீதிமன்றம் இன்று கூறியது.
லாட்டரிச் சீட்டு விற்பனைக்குத் தடை விதிக்கும் தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கவேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் தமிழக அரசின் உத்தரவு செல்லும் என்று கூறி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் லாட்டரிக்குலுக்கல்கள் பாதிக்காத வரை ஒரு மாதம் வரை லாட்டரிச் சீட்டுக்களை விற்கலாம் என்றும் உயர் நீதிமன்றம்உத்தரவிட்டது.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மிசோரம் அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதை இன்று விசாரித்த நீதிபதி ராஜேந்திர பாபு, நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி மாத்தூர் ஆகியோர் அடங்கியஉச்ச நீதிமன்ற பெஞ்ச், அம்மனுவை ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது.
மேலும் லாட்டரிச் சீட்டுகள் விற்பனைக்குத் தடை விதித்து தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு செல்லும் என்றும்நீதிபதிகள் உத்தரவிட்டனர். தான் வெளியிட்டுக் கொண்டிருந்த லாட்டரிச் சீட்டுக்களையே தமிழக அரசு தடைசெய்துள்ளதை அப்போது நீதிபதிகள் சுட்டிக் காட்டினர்.


