இந்தியாவுக்கு உளவு விமானம் தர முன் வருகிறது அமெரிக்கா
-பெங்களூரில் இருந்து காதர் கான்
இந்திய கடற்படைக்கு உளவு விமானங்களை விற்க அமெரிக்கா முன் வந்துள்ளது.
இந்தியாவுக்கு அதி நவீன ஆயுதங்கள் வழங்குவதில் அமெரிக்கா தொடர்ந்து முரண்டு பிடித்தே வருகிறது. அவ்வப்போதுபொருளாதார, தொழில்நுட்பத் தடைகளை விதித்து இந்தியாவுக்கு புதிய தொழில்நுட்பங்கள் கிடைக்கச் செய்யாமல் தடுத்துவருகிறது.
போக்ரான் அணு குண்டு சோதனை நடத்தப்பட்ட பின்னர் நிலைமை மிகவும் மோசமானது. இந்தியா தயாரித்து வந்த லைட்காம்பேட் ஏர்கிராப்ட் (எல்.சி.ஏ) போர் விமானத்துக்குத் தேவையான சில தொழில்நுட்பங்களை கடைசி நேரத்தில் அமெரிக்கா தரமறுத்தது. இதையடுத்து இந்தியாவே விமானத்தை முழுமையாகத் தயாரித்து முடித்து பறக்கச் செய்தது.
இதைப் போல பலவிதமான ஆயுத, விண்வெளி ஆராய்ச்சிகளிலும் அமெரிக்கா கடைசி நேரத்தில் கைவிட்டும் இந்தியா சாதித்துக்காட்டியுள்ளது.
இந் நிலையில் இந்திய கடற்படைக்குத் தேவையான பி-3 ஓரியன் ரக உளவு விமானங்களை வழங்க அமெரிக்காவின் லாக்ஹீட்மார்ட்டின் நிறுவனம் முன் வந்துள்ளது.
இப்போது பெங்களூரில் நடந்து வரும் சர்வதேச விமானக் கண்காட்சியில் அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, இத்தாலி, ஜெர்மன்,இஸ்ரேல், செக் உள்ளிட்ட 18 நாடுகள் பங்கேற்று தங்களது விமானங்களின் திறன்களைக் காட்டி வருகின்றன.
இதில் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனமும் பங்கேற்றுள்ளது.
இந்தியாவிடம் ஜெர்மன்-பிரான்ஸ் கூட்டுத் தயாரிப்பில் உருவான டோர்னியர் ரக கடல் கண்காணிப்பு விமானங்கள் இருந்தாலும்பி-3 ஓரியன் போன்ற நவீன உளவு விமானங்கள் இல்லை. இதை பிரான்சிடம் வாங்க இந்தியா திட்டமிட்டிருந்தது. இந் நிலையில்அமெரிக்காவே அதை வழங்க முன் வந்துள்ளது.
இந்தியாவுக்கு 8 முதல் 12 ஓரியன் விமானங்கள் வரை விற்பது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சக அதிகாரிகளுடன் லாக்ஹீட்மார்ட்டின் நிறுவன அதிகாரிகளும் அமெரிக்க அதிகாரிகளும் பேச்சு நடத்தி வருகின்றனர்.
மேலும் தனது எப்-16 ரக போர் விமானத்தை இந்தியாவுக்கு விற்கவும் லாக்ஹீட் மார்ட்டின் முன் வந்துள்ளது. ஆனால், இந்தியவிமானப் படை ரஷ்ய விமானங்களைத் தான் பயன்படுத்தி வருகிறது. அமெரிக்க விமானங்களை பயன்படுத்துவது இல்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர இந்தியாவின் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த தனது ராக்கெட்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும்இந்த நிறுவனம் கூறியுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) தனது தகவல் தொழில்நுநுட்ப செயற்கைக்கோள்களை முன்பு ரஷ்ய ராக்கெட்களின் உதவியுடன் செலுத்தி வந்தது. இப்போது ஐரோப்பாவின் ஏரியன் ஸ்பேஸ்ராக்கெட்டுகளைத் தான் பயன்படுத்துகிறது.
உள் நாட்டில் வடிவமைக்கப்பட்டு வரும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் முழுமையாகத் தயாராகி விட்டால் இனி இந்தியாவே தனதுஎல்லா செயற்கைக் கோள்களையும் விண்ணில் செலுத்திக் கொள்ளும்.
இந் நிலையில் தனது ராக்கெட்டுகளை வழங்க அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் முன் வந்துள்ளது. இதை ஏற்க இஸ்ரோவும்முன் வந்துள்ளதாகத் தெரிகிறது. அடுத்த சில ஆண்டுகளில் 7 செயற்கைக் கோள்களை அமெரிக்க ராக்கெட்டுகள் மூலம் இந்தியாசெலுத்தும் என்று கூறப்படுகிறது.
பெங்களூரில் இது தொடர்பான உயர் மட்ட ஆலோசனைகளில் இஸ்ரோ மற்றும் லாக்ஹீட் மார்ட்டின நிறுவன அதிகாரிகள் பேச்சுநடத்தி வருகின்றனர்.
பெங்களூர் விமானக் கண்காட்சியில் பிரான்ஸ் பிரதமர் ஜீன் பெர்ரி ரபாரினும் நேற்று கலந்து கொண்டார். இவர் தவிர பிரிட்டிஷ்அமைச்சர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்திய விமானப் படைக்குத் தேவையான போர் பயிற்சி விமானங்களை விற்பதில் பிரிட்டன், ரஷ்யா, செக் நாடுகளிடையே கடும்போட்டி ஏற்பட்டுள்ளது.
கடந்த 3 நாட்களாக இந்த மூன்று நாடுகளின் போர் பயிற்சி விமானங்களும் பெங்களூர் வானில் தங்களது திறமைகளைக் காட்டிவருகின்றன.
பிரிட்டனின் ஹாக்-100 ரக விமானம், ரஷ்யாவின் மிக் போர் பயிற்சி விமானம், செக் நாட்டின் லிமா ரக விமானங்கள் இந்தப்போட்டியில் உள்ளன.
இவை தவிர இஸ்ரேலின் விமானியில்லா விமானங்கள், இந்தியாவின் எல்.சி.ஏ (லைட் காம்பேட் ஏர்கிராப்ட்) ஆகியவையும்விண்ணில் சாகசங்களைக் காட்டி வருகின்றன.
ரஷ்யாவின் சுகோய்-30, மிக்-29 எம்.கே2, பிரான்சின் மிராஜ்-2000, பால்கன் ஆகிய விமானங்களும் பெங்களூர் வானில் விருந்துபடைத்து வருகின்றன.
இதற்கிடையே ஏர்-இந்தியா நிறுவனத்துக்கு தங்களது போயிங் விமானங்களை விற்க அமெரிக்காவும், ஏர் பஸ் விமானங்களைவிற்க பிரான்சும் கடும் போட்டி போட்டு வருகின்றன. இன்று டெல்லி சென்றுள்ள பிரான்ஸ் பிரதமர் ஜீன்-பெர்ரி ரபாரின் பிரதமர்வாஜ்பாயைச் சந்திக்கும்போது ஏர் பஸ் விமானங்களை வாங்குமாறு வலியுறுத்துவார் என்று தெரிகிறது.
இந்தியா 6 முதல் 8 விமானங்கள் வாங்கத் திட்டமிட்டுள்ளது. பல மில்லியன் டாலர் மதிப்பு கொண்டது இந்த காண்ட்ராக்ட் என்பதுகுறிப்பிடத்தக்கது.
விமானக் கண்காட்சி சிறப்புச் செய்திகள்- Battle of jets geared to set Bangalore skies ablaze
- Aero Show 2003 - A Carnival over Blore sky
- India to test Agni-III with 3000 kms range: Aatre


