For Daily Alerts
Just In
மழை கோரி தென் பெண்ணை ஆற்றில் முஸ்லீம்கள் சிறப்புத் தொழுகை
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியில் உள்ள முஸ்லீம்கள் மழை கோரி தென் பெண்ணை ஆற்றின்நடுவே நின்று சிறப்புத் தொழுகை நடத்தினர்.
காவேரிப்பட்டணம் பகுதியில் உள்ள நான்கு மசூதிகளைச் சேர்ந்த முஸ்லீம்கள் மழை வேண்டும் என்பதற்காகதென் பெண்ணை ஆற்றில் நின்று சிறப்புத் தொழுகை நடத்த முடிவு செய்தனர்.
இதையடுத்து நான்கு மசூதிகளையும் சேர்ந்த முஸ்லீம்கள் ஊர்வலமாகக் கிளம்பி தென் பெண்ணை ஆற்றுக்குச்சென்றனர். பின்னர் அங்கு கூட்டுத் தொழுகை நடந்தது.
பல ஆண்டுகளுக்கு முன் இதேபோலவே இங்கு தொழுகை நடந்ததாகவும், அதைத் தொடர்ந்து மழைபெய்ததாகவும் தலைமை மசூதி நிர்வாகியான அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.


