For Daily Alerts
Just In
தர்மபுரி மின்கோபுர தகர்ப்பு வழக்கு: இன்று தீர்ப்பு
சென்னை:
தர்மபுரி அருகே கடந்த 1995ல் உயர் அழுத்த மின் கோபுரத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்த வழக்கில் இன்றுதீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 1995ம் ஆண்டு மே 20ம் தேதி தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை அருகே உள்ள பாஹேபள்ளிஎன்ற இடத்தில் இருந்த உயர் அழுத்த மின் கோபுரம் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது.
இது தொடர்பாக தமிழர் விடுதலைப் படைத் தலைவர் மாறன், அந்த அமைப்பைச் சேர்ந்த ரேடியோ வெங்கடேசன்,மாணிக்கம், கலை, சேகர், தங்கவேல் ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது சென்னை-பூந்தமல்லியில் உள்ள பொடா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.
இந்நிலையில் இன்று பிற்பகல் இந்த வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


