போளூர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜெ. நிதியுதவி
சென்னை:
போளூர் அருகே சமீபத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்குரூ.50,000 வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே கடந்த 12ம் தேதி அரசு பஸ்சும் லாரியும் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் மூன்று பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
காயமடைந்த பலர் திருவண்ணாமலை மற்றும் வேலூர் அரசு மருத்துவமனைகளில்சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக்கு நிதியுதவி வழங்கஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50,000ம்,படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.15,000ம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.6,000ம் வழங்கஅவர் உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து இந்த உதவி அளிக்கப்படுவதாக தமிழக அரசின்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


