கோவை சிறையில் தமிழ் தீவிரவாதிகள் தாக்கியதில் 4 வார்டன்கள் காயம்
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மத்திய சிறையில் தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்கும் சிறைஅதிகாரிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு ஜெயிலர் மற்றும் 3 வார்டன்கள்படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அங்கு ஆயுதப் படைக் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சிறையில் அல்-உம்மா மற்றும் தமிழ் தீவிரவாதிகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டகைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் 11வது பிளாக்கில் தமிழர் விடுதலைப் படையைச்சேர்ந்த ஏழு தமிழ் தீவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று பகல் பக்கத்து பிளாக்கில் இருந்த ஒரு கைதியைப் பார்த்துப் பேச ஒரு தமிழ்தீவிரவாதி முயன்றுள்ளான். ஆனால் சிறைக் காவலர்கள் அதற்கு அனுமதி தர மறுத்தனர்.
இதையடுத்து மற்ற தமிழ் தீவிரவாதிகளும் அவனுடன் சேர்ந்து கொண்டு உருட்டைக் கட்டைகளால்சிறை காவலர்களைப் பயங்கரமாகத் தாக்க ஆரம்பித்தனர். இதனால் சிறைக் காவலர்கள் சிறிதிநிலைகுலைந்து போனாலும் பின்னர் பதிலுக்குத் தாக்கினர். இதனால் அங்கு பெரும் பதற்றம்ஏற்பட்டது.
இருந்தாலும் தமிழ் தீவிரவாதிகளின் மிகவும் மோசமாகத் தாக்கியதில் ஒரு ஜெயிலரும், மூன்று சிறைவார்டன்களும் பலத்த காயம் அடைந்தனர்.
இதையடுத்து சிறையின் அபாய மணி ஒலிக்கப்பட்டது. காயமடைந்த ஜெயிலரும் சிறை வார்டன்கம்சிறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தாக்கிய தமிழ் தீவிரவாத கைதிகள் உடனடியாகஅவர்களுடைய அறைகளில் அடைக்கப்பட்டனர்.
மேலும் அந்த பிளாக்கில் மேலும் தகாத சம்பவங்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகஏராளமான ஆயுதப் படை போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
கோயம்புத்தூர் சிறையில் கைதிகளை வார்டன்கள் மிகவும் தரக் குறைவாக நடத்துவதாக சமீபத்தில்அடிக்கடி புகார்கள் வந்து கொண்டிருந்தன. இதைத் தொடர்ந்து கடந்த வாரம்தான் இங்கு மனிதஉரிமை கமிஷன் அதிகாரிகள் விசாரணை நடத்திவிட்டுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


