வீரப்பன் சுற்றி வளைப்பு: விரைவில் பிடிபடுவான் என்கிறார் டி.ஜி.பி.
மதுரை:
வீரப்பனை மாதேஸ்வரன் மலைப் பகுதியில் போலீசார் சுற்றி வளைத்துள்ளதாகவும் அவனால் அப் பகுதியில் இருந்து தப்ப முடியாது எனதமிழக காவல்துறை டி.ஜி.பி. ராஜகோபாலன் கூறினார்.
சமீபத்தில் வீரப்பன் கும்பலுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்த ஒரு அதிரடிப் படை வீரர் மதுரை அரசு மருத்துமனையில்சேர்க்கப்பட்டுள்ளார். அவரைப் பார்க்க டி.ஜி.பி. இன்று மதுரை வந்திருந்தார். மருத்துவமனையில் நிருபர்களிடம் பேசிய அவர்,
கர்நாடக மற்றும் தமிழக போலீசார் அவனை அந்த மலைப் பகுதியிலேயே சுற்றி வளைத்துவிட்டனர். இதனால் அவன் பிடிபடப் போவதுநிச்சயம். இந்தப் பகுதிக்குள் தான் அவன் சுற்றி வந்தாக வேண்டும்.
வெளியில் வரவோ, இனியும் ஆட்களைக் கடத்துவது போன்ற செயல்களில் அவன் ஈடுபடுவோ வாய்ப்பே இல்லை.
நான் சமீபத்தில் அந்தப் பகுதியில் 3 நாட்கள் தங்கியிருந்து நிலைமையை நேரில் பார்வையிட்டேன். மலை மாதேஸ்வரத்தில் தமிழகஎல்லையில் உள்ள இளஞ்சிகரை, கட்டாகரை, பாலாறு ஆகிய பகுதிகளிலும் கர்நாடகத்தில் உள்ள தெங்கடி என்ற இடத்திலும்அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த 4 இடங்களில் இருந்தவண்ணம் தேடுதல் வேட்டை நடக்கிறது. மிக அடர்ந்த காடு அது. வீரப்பன் இந்த 4 இடங்களுக்கும் இடையேதான் தப்பியோடிக் கொண்டிருக்கிறான். இருந்தாலும் அவனைப் பிடித்துவிட முடியும்.
பெண்களுக்கான குற்றஙகளைத் தடுக்க சிறப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என்றார் ராஜகோபாலன்.
-->
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications