For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாத்தான்குளத்தில் எல்லாமே தலைகீழ்

By Staff
Google Oneindia Tamil News

சாத்தான்குளம்:

வழக்கமாக இடைத் தேர்தல்களில் அதிமுகவினர் தான் பிற கட்சியனரையும் பொது மக்களையும்பத்திரிக்கையாளர்களையும் தாக்குவார்கள். ஆனால், சாத்தான்குளத்தில் நிருபர்களை மட்டுமேஅதிமுகவினர் தாக்கினர்.

பொது மக்களும் பிற கட்சியினரும் அதிமுகவினரைத் தாக்கினார்கள்.

நிருபர்கள் மீது செருப்பு வீச்சு:

சாத்தான்குளம் இடைத் தேர்தலின்போது வெளியூர்களில் இருந்து வந்து கள்ள ஓட்டுப் போட முயன்றஅதிமுகவினரைப் படம் பிடித்த பத்திரிக்கை புகைப்பட நிருபர்களை அதிமுகவினர் தாக்கினர்.நிருபர்கள் மீது செருப்புகளையும் மற்றும் கற்களையும் வீசினர்.

Police evacuating ADMK men who tried to cast bogus votes

கள்ள ஓட்டு போட வந்த அதிமுகவினரை வெளியேற்றும் போலீஸ்

பிரகாசபுரம் வெள்ளரிக்காயுரணியில் உள்ள ஜேம்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் உள்ள இரண்டுவாக்குச் சாவடிகளில் 250க்கும் மேற்பட்ட வெளியூர் அதிமுகவினர் கள்ள ஓட்டு போடுவதாகநிருபர்களுக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து நிருபர்கள், புகைப்படக்காரர்கள், காமிரா மேன்கள் உள்பட 20 பேர் அந்த இடத்திற்குவிரைந்தனர். வாக்குச் சாவடிக்கு அருகே ஒரு வீட்டின் முன் நின்று கொண்டிருந்த அதிமுகவினரைபத்திரிக்கை புகைப்படக் காரர்கள் படம் எடுக்க ஆரம்பித்தனர்.

அவர்கள் படம் எடுப்பதைப் பார்த்து ஆத்திரமடைந்த அதிமுகவினர் உடனே அவர்களை விரட்டிஅடித்தனர். மேலும் செருப்புகள், கற்கள் ஆகியவற்றையும் நிருபர்கள் மீது வீசி எறிந்தனர்.

ஆனால் இவ்வளவையும் போலீசார் பார்த்துக் கொண்டு சும்மா நின்றிருந்தனர். இதையடுத்துநடுரோட்டில் அமர்ந்து நிருபர்கள் போராட்டம் நடத்தவே தேர்தல் அதிகாரிகள் ஓடி வந்துசமாதானம் செய்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கும்உத்தரவிட்டனர்.

எம்.பியின் தர்மசங்கடம்:

இந் நிலையில் கள்ள ஓட்டு போட ஆட்களைக் கூட்டி வந்து பொது மக்களிடமும்காங்கிரஸ்காரர்களிடம் சிக்கி அடி வாங்கிய அதிமுக எம்.பி. மைத்ரேயன் அது குறித்து போலீசில்இதுவரை புகார் தரவில்லை. புகார் தந்தால், வெளியூர்காரரான இவர் ஏன் தொகுதிக்குள் இருந்தார்என்ற கேள்வி வரும். இதனால் அவர் அங்கு இருந்ததையே மறைக்கும் முயற்சிகளில் போலீசார்ஈடுபட்டுள்ளனர்.

EC official pacifying agitated Press persons

அதிமுகவினரால் தாக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களை சமாதானம் செய்யும் தேர்தல் அதிகாரி

ஆனாலும், அடி வாங்காமல் தப்புவதற்காக போலீஸ் ஜீப்பின் பின்னால் போய் இவர் மறைந்ததைபத்திரிக்கையாளர்கள் படம் பிடித்துவிட்டனர். இவருடன் வந்த 4 அதிமுகவினரின் வேட்டி,சட்டைகள் கிழிக்கப்பட்டன.

கள்ள ஓட்டு ஜோர்:

மத்திய தேர்தல் பார்வையாளர்கள், மத்திய தேர்தல் பணியாளர்களின் கண்காணிப்பில் தேர்தல் நடந்ததாலும்,தேர்தலுக்கு முதல்நாள் முதல்வருக்கே தேர்தல் கமிஷன் டோஸ் விட்டதாலும் கள்ள ஓட்டுக்கள் பெருமளவில்தடுக்கப்பட்டன. ஆனாலும், போலீசாரின் உதவியுடன் ஆங்காங்கே அதிமுகவினர் கள்ள ஓட்டுக்கள் போடத்தான்செய்தனர்.

இளங்கோவன் குற்றச்சாட்டு:

சாத்தான்குளத்தில் 10 வாக்குச் சாவடிகளில் கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டுள்ளதாகவும், எனவே அங்கு மறு வாக்குப் பதிவுநடத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கோரியுள்ளார்.

திருச்சியில் இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

Ilangovanகருங்குளம், கால்வாய், சேராகுளம், ராமானுஜ புதூர் ஆகிய கிராமங்களில் உள்ள 10 வாக்குச் சாவடிகளில் நேற்றையதேர்தலின்போது கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டுள்ளன. இதைப் புகைப்படம் எடுக்க முயன்ற ஒரு பத்திரிக்கை நிருபரை அதிமுகவினர்அடித்து, உதைத்து அவருடைய காமிராவையும் பறித்துக் கொண்டனர்.

அதிமுகவினர்தான் கள்ள ஓட்டுக்களைப் போட்டிருப்பதாக போலீஸாரிடம் பலமுறை புகார் கூறியும் அவர்கள் அதைக்கண்டுகொள்ளவே இல்லை. இது தொடர்பாக நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியான மிருத்யுஞ்சய் சாரங்கியிடம் புகார் கொடுத்துள்ளோம். மேலும் தலைமைத் தேர்தல்கமிஷனுக்கும் இந்தப் புகார் தொடர்பாக பேக்ஸ் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளோம்.

வளர்மதிக்கு என்ன வேலை?:

தேர்தல் கமிஷன் பிறப்பித்த உத்தரவையும் மீறி அமைச்சர் வளர்மதி உள்ளிட்ட அதிமுகவினர் சாத்தான்குளம் தொகுதியைவிட்டுவெளியேறவில்லை. இது தொடர்பாக நாங்கள் புகார் கொடுத்தும் போலீசாரும் சரி, தேர்தல் கமிஷனும் சரி எந்த நடவடிக்கையும்எடுக்கவில்லை.

ஆனாலும் அதிமுகவினரின் பல்வேறு அராஜகங்களையும் மீறி சாத்தான்குளம் தொகுதியில் காங்கிரஸ் அபாரமாக வெற்றி பெறும்என்றார் இளங்கோவன்.

கரன்சிகளைக் காட்டி..:

நேற்று சேரக்குளம் உள்ளிட்ட சாத்தான்குளத்தின் பல பகுதிகளிலும் ஆங்காங்கே நூறு ரூபாய் கரன்சி கட்டுகளைவைத்துக் கொண்டு சில அதிமுகவினர் அலைந்தனர். ஓட்டுக்கு நூறு ரூபாய் என அப்பாவி ஏழைகள் பலரையும்அவர்கள் மடக்கினர்.

பொது மக்களிடம் அடி:

சாத்தான்குளத்தில் முதல்முறையாக வித்தியாசமான காட்சியையும் பார்க்க முடிந்தது. வழக்கமாக பொது மக்களைத்தாக்கும் அதிமுகவினர் இந்த முறை அவர்களிடம் அடி வாங்கினர். தட்டார்மடம், சுன்டங்கோட்டை, படுகப்பத்து,முதலூர் ஆகிய இடங்களில் பொது மக்களே கள்ள ஓட்டு போட வந்த வெளியூர் அதிமுகவினரை அடையாளம்கண்டு தடுத்தனர்.

இதையடுத்து அதிமுகவினர் போலீசாரை துணைக்கு அழைக்க, பொது மக்களின் ஆவேசத்தைக் கண்ட போலீசார்திரும்பி நின்று கொண்டனர். இதைத் தொடர்ந்து இந்த இடங்களில் அதிமுகவினரை பொது மக்களே புரட்டிஎடுத்தனர்.

மிக வித்தியாசமாக எல்லா வாக்குச் சாவடிகளிலும் உள்ளூர் மக்கள் பெருமளவில் திரண்டு நின்று கொண்டனர்.ஓட்டு போட வந்தவர்களில் வெளியூர்காரர்கள் இருந்தால் அவர்களே சட்டையைப் பிடித்து போலீசாரிடம்ஒப்படைத்தனர். போலீசாரும் அவர்களை கொத்தாக அள்ளி வேனில் போட்டு தொகுதிக்கு வெளியே போய்இறக்கிவிட்டுவிட்டு வந்தவண்ணம் இருந்தனர்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X