சேது சமுத்திரத் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி
டெல்லி:
தமிழர்களின் 40 ஆண்டு கோரிக்கையான சேது சமுத்திரத் திட்டத்துக்கு மத்திய அரசு ஒருவழியாக அனுமதிஅளித்துள்ளது.
இத் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள பாக் ஜலசந்தியில் ஒரு பகுதிஆழப்படுத்தப்படும். இதனால் கடலிலேயே கால்வாய் மாதிரி அமைக்கப்பட்டு மிகப் பெரிய கப்பல்கள் அந்தவழியே கடந்து செல்ல வழி செய்யப்படும்.
இப்போது ஆழம் குறைவாக இருப்பதால் பெரிய கப்பல்களை இயக்க முடியவில்லை. சேது சமுத்திரத் திட்டததைநிறைவேற்றக் கோரி மத்திய அரசை கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு அரசுகளும் வலியுறுத்தி வந்தன. ஆனால்,தேர்தலின்போது வாக்குறுதிகள் மட்டும் தரப்பட்டதோடு சரி. அனுமதியையும் தரவில்லை. இதற்கான நிதியும்ஒதுக்கவில்லை.
இந் நிலையில் தேசிய ஜனநாயக அரசில் பங்கேற்க திமுக, மதிமுக, பா.ம.க. போன்றவை இத் திட்டத்தைநிறைவேற்றக் கோரி மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தின. இத் திட்டத்தின் தீவிர ஆதரவாளரான மதிமுகபொதுச் செயலாளர் வைகோ இந்தப் பிரச்சனையை அடிக்கடி மக்களவையில் கிளப்பினார்.
இதையடுத்து கப்பல் போக்குவரத்துத் துறையின் இணை அமைச்சராக பா.ஜ.கவைச் சேர்ந்த திருநாவுக்கரசுநியமிக்கப்பட்டார். பதவியேற்றதுமே இந்தத் திட்டத்துக்கான முயற்சிகளை துரிதப்படுத்தினார்.
இவ்வாறு தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களின் தீவிர முயற்சியால் சேது சமுத்திரத் திட்டத்தை அமலாக்கமத்திய அரசு ஒப்புக் கொண்டது. ஆனால், இதைக் கெடுக்கும் முயற்சியில் இலங்கை இறங்கியது.
தலைமன்னாருக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையே பாலம் கட்டப் போவதாக இலங்கை அறிவித்தது. இதுதொடர்பாக பிரதமர் வாஜ்பாயுடன் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயும் பேசினார். இதனால் இந்தப்பாலம் அமைப்பது குறித்த ஆய்வுப் பணிகளைத் தொடங்கவும் மத்திய அரசு முயன்றதது.
ஆனால், இந்தப் பாலம் அமைந்தால் இலங்கைக்குத் தான் பலனளிக்கும். தமிழகத்துக்கோ இந்தியாவுக்கோ அல்லஎன வைகோ குரல் எழுப்பினார். இத் திட்டத்துக்கு ஆதரவு தருவதை உடனே கைவிட்டு சேது சமுத்திரத்திட்டத்துக்கு அனுமதி தர வேண்டும் என கடந்த வாரம் வாஜ்பாய்க்குக் கடிதமும் அனுப்பினார்.
இந் நிலையில் சேத சமுத்திரத் திட்டத்துக்கு மத்திய அரசு தனது அனுமதியை வழங்கியது. இத் தகவைல நிதியமைச்சர்ஜஸ்வந்த் சிங் மக்களவையில் தெரிவித்தார். இதை தமிழக எம்.பிக்கள் மேஜைகளைத் தட்டி வரவேற்றனர்.
இந்தக் கால்வாய் குறித்த ஆய்வுப் பணிகளை உடனே தொடங்குமாறு கடற்படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.நீண்ட காலம் இழுத்தடிக்காமல் விரைவிலேயே இத் திட்டத்தை நிறைவேற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தக் கால்வாய் அமைந்தால் இந்தியாவுக்கு கிழக்குப் பகுதிகளில் உள்ள நாடுகளின் கப்பல்கள் வளைகுடாபோன்ற மேற்குப் பகுதிகளுக்கு எளிதில் செல்ல வழி பிறக்கும். இப்போது இந்தக் கப்பல்கள் யாவும் இலங்கையைசுற்றித் தான் செல்கின்றன.
இந்தக் கால்வாய் வழியே வந்தால் தூத்துக்குடி துறைமுகம் மிக முக்கிய வர்த்தக மையமாக மாறும். கிட்டத்தட்டசிங்கப்பூர் துறைமுகத்தின் முக்கியத்துவத்தை தூத்துகுடி பெறும். இந்த துறைமுகத்தை வைத்து தென் தமிழகம் பெரும்வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வைகோ நன்றி:
இத் திட்டத்துக்கு அனுமதி கொடுத்த பிரதமர் வாஜ்பாய்க்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நன்றிதெரிவித்துள்ளார்.
இது குறித்து மதிமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இத் திட்டத்துக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லைஎன்பதை சுட்டிக் காட்டி பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டது. மேலும் மதிமுக எம்.பிக்கள் வாஜ்பாயை நேரில்சந்தித்தும் பேசினர். அப்போதே இத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படும். விரைவில் இத் திட்டத்துக்கு அனுமதிதரப்படும் என வாஜ்பாய் கூறினார்.
சொன்னதைச் செய்த பிரதமருக்கு நன்றி என்று கூறப்பட்டுள்ளது.


