24 இந்துக்கள் சுட்டுக் கொலை: தீவிரவாதிகள் வெறிச் செயல்
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் உள்ள நந்திமார்க் கிராமத்தில் இன்று அதிகாலை 11 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 24இந்துக்களை வரிசையாக நிற்க வைத்து தீவிரவாதிகள் கொடூரமாக சுட்டுக் கொன்றனர்.
புல்வாமா மாவட்டத்தில் உள்ள நந்திமார்க் கிராமத்திற்குள் ராணுவ உடையில் அதிகாலையில் சுமார்15 தீவிரவாதிகள் புகுந்தனர்.
தாங்கள் தீவிரவாதிகளைத் தேடி வந்திருப்பதாக அங்கிருந்த போலீசாரிடம் கூறினர். போலீசாரும்அவர்களை ராணுவத்தினர்தான் என்று நம்பி விட்டனர்.
இதையடுத்து கிராமத்திற்குள் புகுந்து 11 பெண்கள், இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட 24 பேரைவரிசையாக நிற்க வைத்த தீவிரவாதிகள், அவர்களைக் கொடூரமாகச் சுட்டனர். இதில் அந்த 24பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையடுத்து அந்தத் தீவிரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களைப் பாதுகாப்புப் படையினர்தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தலைவரான அப்துல் மஜித் தார் நேற்றுதான் கொல்லப்பட்டார்.இந்த நிலையில் இன்று அதிகாலை தீவிரவாதிகள் நந்திமார்க் கிராமத்தினுள் புகுந்து வெறித்தனமாக24 இந்துக்களை சுட்டுக் கொன்றுள்ளனர்.
இந்தச் சம்பவத்திற்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகமது ஆகிய பாகிஸ்தான் அமைப்புகளைச் சேர்ந்தபயங்கரவாதிகள் இந்தப் பகுதியில்தான் அதிக அளவில் நடமாடி வருகின்றனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
கடந்த நவம்பர் மாதம் காஷ்மீரில் தேர்தல் நடந்து முப்தி முகமது சயீது முதல்வராகத்தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் காஷ்மீரில் நடந்துள்ள மிகவும் கொடூரமான தீவிரவாதத்தாக்குதலாகும் இது. இந்தத் தாக்குதலை அவர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
சட்டசபையில் பா.ஜ.க. ரகளை:
இதற்கிடையே காஷ்மீர் சட்டசபையிலும் இந்தப் படுகொலைகளுக்குக் கடும் கண்டனம்தெரிவிக்கப்பட்டது.
இன்று காலை அவை கூடியதும் இந்தச் சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில் ஒத்திவைப்புத் தீர்மானம்கொண்டுவரப்பட்டது. சபையும் 15 நிமிடங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டது.
அதன் பின்னர் மீண்டும் சட்டசபை கூடியதும் சபாநாயகர் தாரா சந்த் கண்டனத் தீர்மானத்தைவாசித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக பா.ஜ.க. உறுப்பினரான ஜுகல் கிஷோர் பேசினார். அவர்பேசுவதற்காகக் கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்த நிலையில், பேச்சை நிறுத்திக் கொள்ளுமாறுகிஷோரிடம் சபாநாயகர் கூறினார். ஆனால் கிஷோர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
இதையடுத்து அவரை சபையிலிருந்து வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு சபாநாயகர்உத்தரவிட்டார். அவைக் காவலர்கள் கிஷோரை குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டு வெளியேசென்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த கிஷோர் தன்னுடைய சட்டையைக் கிழித்துக் கொண்டு அரசுக்கு எதிரானகோஷங்களை எழுப்பினார். இதனால் சட்டசபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அவசரமாய் கூடியது பாதுகாப்பு குழு:
இதற்கிடையே பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையின் பாதுகாப்புக் குழுக்கூட்டம் இன்று பகல் கூடியது.
துணைப் பிரதமர் அத்வானி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, அமைச்சரவை செயலாளர் கமல் பாண்டே, உள்துறைசெயலாளர் கோபாலசாமி ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் ராணுவதளபதி என்.சி. விஜ், ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் உளவுத் துறை அதிகாரிகள் ஆகியோரும்இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
காஷ்மீர் தீவிரவாதிகள் 24 இந்துக்களைப் படுகொலை செய்ததற்கு இந்தக் கூட்டத்தில் கடும்கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தை அத்வானி நாளை நேரடியாகப்பார்வையிடுவார் என்று இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அவர் நாளை டெல்லி திரும்பியபின்னர் மீண்டும் பாதுகாப்புக் குழு கூடவுள்ளது.
சுமார் 90 நிமிடங்களுக்கு இந்தக் கூட்டம் நடைபெற்றது. நேற்று ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர்கொல்லப்பட்டது குறித்தும் காஷ்மீரில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பது குறித்தும்,தீவிரவாதிகளை ஒடுக்குவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
ஈராக் போர் குறித்தும் இன்றைய பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பாக். ஷெல் தாக்குதலில் 4 பேர் பலி:
இதற்கிடையே காஷ்மீரை நோக்கி பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய ஷெல் தாக்குதலில் 4பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய ஜங்கார்ட், பலாகோட், கிருஷ்ணகாதிஉள்ளிட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவில் இந்தத் தாக்குதல் நடைபெற்றது.
இதையடுத்து இந்தியப் படையினரும் பதிலடித் தாக்குதல் நடத்தினர். இன்று காலை வரை இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
பாகிஸ்தான் சதி?
ஈராக் போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காகபாகிஸ்தானே இதுபோன்ற தாக்குதல்களைத் தூண்டிவிட்டுக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
காஷ்மீர் விவகாரத்தை உலக அளவில் பெரிதுபடுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காகவேதீவிரவாதிகளைத் தூண்டி விட்டு காஷ்மீரில் உள்ள அப்பாவி மக்களைக் கொன்று வருவதாகவும்தெரிகிறது.
அமெரிக்கா கண்டனம்:
இதற்கிடையே காஷ்மீரில் 24 இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அமெரிக்காவன்மையாகக் கண்டித்துள்ளது.
இது தொடர்பாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் ராபர்ட் பிளாக்வில் இன்று வெளியிட்டுள்ளஅறிக்கையில்,
காஷ்மீரில் அப்பாவிப் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 24 பேர் வரிசையாக நிற்க வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட சம்வத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
உயிரிழந்தவளின் குடும்பத்தினருக்கு எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தப் படுகொலையில் ஈடுபட்டவர்கள் விரைவில் பிடிபட்டு,தண்டிக்கப்படுவார்கள் என்று நம்புகிறோம்.
உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் இதுபோன்ற பயங்கரவாதச் செயல்கள் நிற்கும் வரைதீவிரவாதத்திற்கு எதிரான போர் நின்று விடப் போவதில்லை என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார்பிளாக்வெல்.


