ஈராக் பதிலடி: நசிரியாவில் மேலும் 5,000 அமெரிக்க படைகள்
பாஸ்ரா:
பாஸ்ராவில் நடந்து வரும் பயங்கர சண்டையில் ஒரு பிரிட்டிஷ் வீரர் கொல்லப்பட்டார். மேலும் பலர்படுகாயமடைந்தனர்.
நஜாப் அருகே நடந்த மோதலில் நேற்று இவர் கொல்லப்பட்டார். நசிரியாவில் இன்று நடந்த மோதலில் ஒருஅமெரிக்க வீரர் கொல்லப்பட்டார். நரிசியாவின் புறநகர்ப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த 4 அமெரிக்கவீரர்களின் உடல்களையும் அந்தப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
அதே நேரத்தில் பாஸ்ராவின் புறநகர்ப் பகுதியில் ஈராக்கியப் படைகளுடன் பிரிட்டிஷ் படைகளும் நசிரியா,நஜாப் ஆகிய இடங்களில் அமெரிக்கப் படைகளும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டுள்ளன. தரைவழித் தாக்குதல்நடத்துவது மிகவும் கடினமாக உள்ளதால் அமெரிக்க- பிரிட்டிஷ் படைகள் ஈராக்கிய வீரர்கள் மீதுஹெலிகாப்டர்களைக் கொண்டு தாக்கி வருகின்றன.
நசிரியாவில் ஒரு அமெரிக்க வீரரும் நூற்றுக்கும் மேற்பட்ட ஈராக்கிய வீரர்களும் பலியானதாகத் தெரிகிறது.இங்கு ஈராக்கியத் தாக்குதல் தீவிரமாக இருப்பதால் மேலும் 5,000 அமெரிக்கப் படைகள் அனுப்பப்பட்டுள்ளன.இதையடுத்து இந்த நகரில் மட்டும் 12,000 அமெரிக்க படைகள் உள்ளன.
இந்தப் படைகள் நசிரியாவில் புற நகர்ப் பகுதிகளில் வீடு வீடாக சோதனை நடத்தி சந்தேகத்துக்குரியவர்களைக்கைது செய்து வருகின்றனர். இந்த நகர் கட்டுப்பாட்டுக்குள் வராத வரை பாக்தாதுக்குள் அமெரிக்கப் படைகள்நுழைய முடியாது. இந்த நகர் குவைத்- பாக்தாதுக்கு இடையே இருப்பதால் அமெரிக்கப் படைகளின் சப்ளைகளைஇங்குள்ள ஈராக்கிய வீரர்கள் தகர்த்து வருகின்றனர்.
இந் நிலையில் பாக்தாத் நகரின் மீது இன்றும் மிகக் கடுமையான குண்டு வீச்சுத் தாக்குதல் நடக்கிறது. பாக்தாதின்தலைமை தொலைத் தொடர்பு நிலையத்தை அமெரிக்க விமானங்கள் குண்டு வீசித் தகர்த்துள்ளன. ஏவுகணை,விமான குண்டு வீச்சுகளால் பாக்தாத் நகரின் பல இடங்களும் தீப் பிடித்து எரிந்து வருகின்றன.
இதற்கிடையே ஈராக்கிய ராணுவ ஜெனரல் ஒருவரை பாஸ்ராவில் கைது செய்துள்ளதாக நேற்று கூறிய பிரிட்டன்இன்று பல்டி அடித்துள்ளது. அப்படி யாரையும் கைது செய்யவில்லை என லண்டனில் பிரிட்டிஷ் ராணுவச் செய்தித்தொடர்பாளர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
நேற்று கத்தாரில் உள்ள பிரிட்டிஷ் படகளின் குரூப் காப்டன் அல் லாக்வுட், பாஸ்ராவில் ஈராக்கிய ஜெனரல்பிடிபட்டுள்ளதாகக் கூறியிருந்தார்.
இதற்கிடையே ஈராக்கிய வீரர்கள் சீருடையில் இல்லாமல், பொது மக்களைப் போல சாதாரண உடையில் தங்களைத்தாக்குவதாக அமெரிக்க- பிரிட்டிஷ் படைகள் கூறியிருப்பதை ஈராக் மறுத்துள்ளது.
ஈராக் போரில் இதுவரை 40 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்திருப்பதாக பென்டகன் கூறியுள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications