ஹெலிகாப்டர் விழுந்து 3 அமெரிக்க வீரர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
ஈராக்கில் அமெரிக்காவின் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் அதில் இருந்த 3 அமெரிக்கமெரைன் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
யு.எச்.-1 ஹூவே ரகத்தைச் சேர்ந்த இந்த ஹெலிகாப்டரில் நான்கு மெரைன் வீரர்கள் சென்றுகொண்டிருந்தனர்.
தெற்கு ஈராக்கில் பறந்து கொண்டிருந்தபோது இந்த ஹெலிகாப்டர் திடீரென்று விழுந்துநொறுங்கியது.
இதில் அந்த ஹெலிகாப்டரில் இருந்த மூன்று மெரைன் வீரர்கள் கொல்லப்பட்டனர். மற்றொரு வீரர்படுகாயம் அடைந்தார்.
இது ஒரு விபத்து போலத்தான் தெரிவதாக பென்டகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனாலும்விபத்தா அல்லது ஈராக் படையினர் தாக்கியதால் ஹெலிகாப்டர் விழுந்ததா என்பது குறித்துதெரியவில்லை.
-->












Click it and Unblock the Notifications