போலீஸாருக்கு பயந்து ஓடியவர் கிணற்றில் விழுந்து சாவு
சேலம்:
சேலம் அருகே போலீசார் பிடியிலிருந்து தப்பி ஓடிய ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாகஉயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் வேடகாத்தான்பட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். சிலஆண்டுகளுக்கு முன் சாராயம் காய்ச்சி விற்று வந்த இவரைப் போலீசார் அடிக்கடி விசாரணைக்குஇழுத்துச் செல்வது வழக்கம். ஆனால் வெங்கடேஷ் சமீப காலமாக சாராயம் காய்ச்சும் தொழிலைவிட்டு விட்டார்.
இந்நிலையில் சாராய வழக்கு தொடர்பாக அவரைப் போலீசார் அழைத்துச் சென்றனர். ஆனால்இப்போதெல்லாம் நான் சாராயம் காய்ச்சுவதில்லை என்று கூறி வர மறுத்தார் வெங்கடேஷ்.
ஆனால் போலீசார் அவரை வலுக்கட்டாயமாக அடித்து இழுத்துச் சென்றனர். இதையடுத்துபோலீசாரின் பிடியிலிருந்து தப்பி ஓடினார் வெங்கடேஷ். அப்போது வழியில் இருந்த கிணற்றில்அவர் தவறி விழுந்து தலையில் அடிபட்டி பரிதாபமாக இறந்தார்.
வெங்கடேஷின் உடல் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால்உடலைத் திரும்பப் பெற்றுக் கொள்ள அவருடைய உறவினர்கள் மறுத்து விட்டனர்.
வெங்கடேஷ் இறப்பதற்குக் காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலைப்பெற்றுக் கொள்ள மாட்டோம் என்று அவர்கள் கூறினர். போலீஸ் அதிகாரிகள் வந்து எவ்வளவோசமாதானம் செய்தும் வெங்கடேஷின் உறவினர்கள் தங்கள் முடிவில் உறுதியாக இருந்தனர்.


