For Quick Alerts
For Daily Alerts
Just In
மகாமக குளத்தை களங்கப்படுத்த தி.க. முயற்சி: இந்து முன்னணி புகார்
தஞ்சாவூர்:
கும்பகோணத்தில் உள்ள மகாமக குளத்தை களங்கப்படுத்த திராவிடர் கழகத்தினர் முயற்சிசெய்கிறார்கள் என இந்து முன்னணி அமைப்பு புகார் கூறியுள்ளது.
இது தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட கலெக்டருக்கு இந்து முன்னணி அமைப்பினர் கோரிக்கை மனுஅனுப்பியுள்ளனர். அம்மனுவில்,
வரும் 13ம் தேதி திராவிடர் கழகம் சார்பில் புனிதமான மகாமக குளக்கரை அருகே கூட்டம் நடத்தஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
அந்த சமயத்தில் மகாமக குளத்தைக் களங்கப்படுத்தவும் அவர்கள் முயற்சிக்கப் போவதாகஎங்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.
எனவே குளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு தி.க. கூட்டத்திற்கு கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்துசெய்ய வேண்டும். குளத்திற்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று அம்மனுவில் இந்துமுன்னணி அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


