For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிர்குக், மொசூல் நகர்கள் வீழ்ந்தன

By Staff
Google Oneindia Tamil News

கிர்குக்:

வடக்கு ஈராக்கில் உள்ள கிர்குக் நகரை குர்திஸ் படையினர் கைப்பற்றினர். மேலும் மொசூல்நகருக்குள்ளும் அமெரிக்க, குர்திஸ் படையினர் புகுந்துள்ளனர்.

ஈராக்கின் முக்கிய எண்ணெய்க் கிணறுகள் கிர்குக் நகரில்தான் உள்ளன. ஈராக்கின் எண்ணெய் நகர்என்றே இது அழைக்கப்படுகிறது.

வடக்கு ஈராக்கில் துருக்கியை ஒட்டிய பகுதிகளில் தனி ராஜ்ஜியமே நடத்தி வரும் குர்திஸ் இனமக்கள் அமெரிக்கா உதவியுடன் கிர்குக் நகரைக் கைப்பற்றினர்.

ஆனால் இந்நகர் குர்திஸ் படையினர் வசம் இருப்பதை துருக்கி விரும்பவில்லை. முக்கியஎண்ணெய்க் கிணறுகளைத் தன் கையில் வைத்துக் கொண்டு குர்திஸ் மக்கள் தனி நாடு ஏற்படுத்திவிடுவார்கள் என துருக்கி அஞ்சியது.

எனவே அமெரிக்கப் படையினரே கிர்குக் நகரைத் தங்கள் வசம் எடுத்துக் கொள்ள வேண்டும் எனதுருக்கி கேட்டுக் கொண்டது.

இதையடுத்து அமெரிக்க படைகள் கிர்குக் நகருக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவிக்கொண்டுள்ளன. மேலும் கிர்குக் நகரை விட்டு குர்திஸ் படையினரும் வெளியேறத்தொடங்கியுள்ளனர்.

மொசூலும் வீழ்ந்தது:

இதற்கிடையே அமெரிக்க, குர்திஸ் படையினர் இன்று மொசூல் நகருக்குள்ளும் புகுந்தனர்.

இதையடுத்து மொசூல் நகரில் உள்ள ஈராக் படையினர் அமெரிக்க வீரர்களிடம் சரணடையத்தொடங்கியுள்ளனர். மேலும் ஏராளமான ஈராக் வீரர்கள் மொசூல் நகருக்குள் பதுங்கியுள்ளனர்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X