தூய தமிழில் பெயர் சூடிக் கொண்ட 10,000 விடுதலைச் சிறுத்தைகள்
மதுரை:
மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 10,000 தொண்டர்கள் தங்களுடையபெயர்களைத் தூய தமிழில் மாற்றிக் கொண்டனர்.
கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பல்வேறுபோராட்டங்களை நடத்தி வருகிறது. அதில் ஒரு பகுதியாக இந்துப் பெயர்களை நீக்கிவிட்டு தூயதமிழில் பெயர் சூட்டி வருகின்றனர் அக்கட்சித் தொண்டர்கள்.
மதுரையில் நேற்று இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 10,000 விடுதலைச் சிறுத்தைதொண்டர்கள் தங்களுடைய பெயர்களைத் தூய தமிழில் மாற்றிக் கொண்டதாக அக்கட்சியின்பொதுச் செயலாளர் திருமாவளவன் அறிவித்தார்.
மதமாற்றத் தடைச் சட்டத்தைத் தமிழக அரசு திரும்பப் பெற்றுக் கொள்ளும் வகையில் போராட்டம்தொடரும் என்று அப்போது திருமாவளவன் கூறினார்.
பெயர் மாற்றம் செய்து கொண்டு விடுதலைச் சிறுத்தை தொண்டர்களின் பட்டியலையும் அவர்வாசித்தார்.
-->












Click it and Unblock the Notifications