"பொடா"வில் கோபால் கைது: பாண்டி சட்டசபையில் திமுக வெளிநடப்பு
பாண்டிச்சேரி:
"நக்கீரன்" ஆசிரியர் கோபால் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தீர்மானம்நிறைவேற்றப்படாததைக் கண்டித்து பாண்டிச்சேரி சட்டசபையிலிருந்து திமுக உறுப்பினர்கள்வெளிநடப்பு செய்தனர்.
போலீஸ் உளவாளி கொலை வழக்கு, ஆயுதங்கள் கடத்தல், தனித் தமிழ்நாடு அமைக்க முயற்சித்ததுஉள்பட பல வழக்குகள் தொடர்பாக கடந்த 11ம் தேதி இரவு கோபால் கைது செய்யப்பட்டார்.பின்னர் நேற்று அவர் மீதான வழக்குகள் அனைத்தும் பொடா சட்டத்தின் கீழ் மாற்றப்பட்டன.
இந்நிலையில் பொடா சட்டத்தின் கீழ் கோபால் கைது செய்யப்பட்டது பாண்டிச்சேரி சட்டசபையில்எதிரொலித்தது.
கேள்வி நேரத்தின்போது குறுக்கிட்ட திமுக எம்.எல்.ஏக்கள், கோபால் கைது செய்யப்பட்டதைக்கண்டித்து தீர்மானம் நிறைவேற்றக் கோரி வலியுறுத்தினார்கள்.
மேலும் இப்பிரச்சனை தொடர்பாக ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றும் திமுகஉறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதை அதிமுக உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தனர்.
தேச விரோதச் செயல்களில் ஈடுபட்டிருந்ததால்தான் கோபால் பொடா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார் என அதிமுக உறுப்பினரான அன்பழகன் கூறினார்.
இதையடுத்து திமுக, அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால்அரை மணி நேரத்திற்கு சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்டது.
இதற்கிடையே திமுக உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்க சபாநாயகர் ராமச்சந்திரன் மறுத்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜானகிராமன் தலைமையிலான திமுக எம்.எல்.ஏக்கள்அனைவரும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதையும், பத்திரிக்கை சுதந்திரம் நசுக்கப்படுவதையும்கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறே அவர்கள் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.
நிருபர்கள் புறக்கணிப்பு:
முன்னதாக, பொடா சட்டத்தின் கீழ் கோபால் கைது செய்யப்பட்டதைக் கண்டிக்கும் வகையில்சட்டசபை நிகழ்ச்சிகளை பாண்டிச்சேரி பத்திரிக்கை நிருபர்கள் புறக்கணித்தனர்.
வழக்கமாக சட்டசபைக்குள் சென்று செய்திகளைச் சேகரிக்கும் நிருபர்கள் இன்று உள்ளே செல்லாமல்வளாகத்திற்கு வெளியே நின்றவாறே செய்திகளைச் சேகரித்தனர்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications