For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்டாலினின் ஜாமீன் மனு நிராகரிப்பு: திமுகவினர்- போலீசார் கடும் மோதல்: ஜீப், பஸ்கள் உடைப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக இளைஞரணிச் செயலாளர் மு.க. ஸ்டாலின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் இன்று நிராகரித்தது. இந்த வழக்குத்தொடர்பாக நீதிமன்றத்துக்கு வந்த திமுகவினரை போலீசார் தாக்கியதையடுத்து பெரும் வன்முறை மூண்டது. இதைத்தொடர்ந்து அக் கட்சியின் தொண்டர்கள் பயங்கர வன்முறையில் இறங்கினர்.

ஸ்டாலினின் ஜாமீன் மனு இன்று சென்னை சைதாப்பேட்டை 9வது செசன்ஸ் நீதின்றத்தில் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்குத் தொடர்பாக இன்று காலை ஸ்டாலின் கடலூர் சிறையில் இருந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்குக்கொண்டு வரப்பட்டார்.

பாண்டிச்சேரியில் பதற்றம்:

கடலூரில் இருந்து ஸ்டாலின் போலீஸ் வேனில் பாண்டிச்சேரி வழியாக அழைத்து வரப்பட்டார். அப்போதுபாண்டிச்சேரி முத்தியால்பேட்டை அருகே ஏராளமான திமுகவினர் சாலையில் திரண்டு நின்று வேனைத் தடுக்கமுயன்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தக் கூட்டத்தைத் தாண்டி அவர் தொடர்ந்து சென்னை கொண்டு வரப்பட்டார். காலை 10.30 மணிக்கு அவர்சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டார். ஸ்டாலினைக் காண ஆயிரக்கணக்கானதிமுகவினர் நீதிமன்ற வளாகத்தில் குவிந்தனர். இதையடுத்து பல வேன்களிலும் ஜீப்களிலும் நூற்றுக்கணக்கானபோலீசார் நீதிமன்றத்தின் வெளியே குவிக்கப்பட்டனர்.

ஏதோ நடக்கப் போகுது...

வரும்போதே கலவரத் தடுப்பு உடையுடன், ஹெல்மட், லத்திகளுடன் போலீசார் வந்திறங்கினர். இதனால் ஏதோநடக்கப் போவதை நிருபர்கள் உணர்ந்து கொண்டனர்.

நீதிமன்றத்தைச் சுற்றி தடுப்புகளை அமைத்து இதைத் தாண்டி யாரும் வரக் கூடாது என்று அனைவரையும்தடுத்தனர்.

இந் நிலையில், ஸ்டாலினை விடுவிக்க வேண்டும் என்றும் பொய் வழக்குப் போடும் தமிழக அரசை 356வதுபிரிவைப் பயன்படுத்தி கலைக்க வேண்டும் எனவும் திமுகவினர் கோஷமிட்டனர்.

அவர்களை போலீசார் அடக்க முயன்றனர். அரசுக்கு எதிராக கோஷம் போடக் கூடாது. இங்கே நிற்கக் கூடாது எனதிமுகவினரை போலீசார் விரட்டினர். நீதிமன்ற வளாகத்துக்குள் நுழையவே விடாமல் திமுக தலைவர்கள் கிட்டு,கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோரையும் போலீசார் தள்ளினர். இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர்போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அடிதடி:

இந்த வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளாக மாறியது. இதையடுத்து திமுகவினர் மீது போலீசார் கடும் தாக்குதல்நடத்தினர். தடிகளால் அவர்களை விரட்டி விரட்டி அடித்தனர். இதில் பல திமுகவினரின் மண்டை உடைந்து ரத்தம்கொட்டியது. சுமார் 50 திமுகவினர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து திமுக தொண்டர்கள் பதிலுக்கு போலீசாரைத் தாக்கினர். இதில் பல போலீாருக்கு பலத்த காயம்ஏற்பட்டது.

போலீசாரின் ஜீப்களும் வேன்களும் உடைத்து நொறுக்கப்பட்டன, அந்தப் பகுதியில் சென்ற பஸ்கள் மீதும் கல்வீச்சுநடந்தது. இதில் சில பஸ்களின் கண்ணாடிகள் நொறுங்கின. பஸ்களில் இருந்த பயணிகள் உயிருக்கு பயந்துஇறங்கி ஓடினர்.

அந்தப் பகுதியே ரணகளமாக மாறியது. இந்த பெரும் பரபரப்புக்கு இடையே ஸ்டாலின் ஜாமீன் மனுவை செசன்ஸ்நீதிபதி விசாரித்தார்.

ஜாமீன் இல்லை:

போலீசார் மற்றும் ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைக் கேட்ட நீதிபதி ரவீந்திரன், ஸ்டாலினைஇத்தனை நாட்களாக ஏன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை என்று கேட்டார். இதற்கு பதிலளித்த அரசுத் தரப்புவழக்கறிஞர், ஸ்டாலின் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டதால் அவரைக் கொண்டு வர முடியவில்லை என்றார்.

இதையடுத்து ஸ்டாலின் ஜாமீன் மனுவை நிராகரிப்பதாகவும் வரும் மே 5ம் தேதி வரை அவரை நீதிமன்றக்காவலில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து ஸ்டாலின் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு வெளியே கொண்டு வரப்பட்டு மீண்டும்கடலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

ராணி மேரிக் கல்லூரி மாணவிகளைச் சந்தித்து அவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததையடுத்துஸ்டாலின கைது செய்யப்பட்டார். கல்லூரி காவலாளியைத் தாக்கியதாகவும் மாணவிகளைப் போராடத்தூண்டியதாகவும் முதலில் ஒரு வழக்கு போடப்பட்டது.

கொலை முயற்சி வழக்கு:

இதையடுத்து கடந்த 9ம் தேதி நள்ளிரவில் அவர் கைது செய்யப்பட்டார். அப்போது திமுக தொண்டர்களை வைத்துபோலீசாரைக் கொல்வேன் என்று மிரட்டியதாக ஸ்டாலின் மீது இன்னொரு கொலை முயற்சி வழக்கும்போடப்பட்டது. கடலூர் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

இதில் கல்லூரிக்குள் நுழைந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுவிட்டது. போலீசாருக்கு கொலை மிரட்டல்விடுத்ததாகப் போடப்பட்டுள்ள வழக்கில் இன்று அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. மே 5ம் தேதி வரைநீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஸ்டாலின் பேட்டி:

இந் நிலையில் இன்று நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த ஸ்டாலின் நிருபர்களிடம் பேசுகையில்,

மாணவிகளின் நியாயமான போராட்டதுக்கு ஜனநாயகரீதியில் நான் ஆதரவு தெரிவித்தேன். இதற்காகஜெயலலிதா என் மீது கொலை முயற்சி போட்டுள்ளார். வழக்குகளைப் போட்டு திமுககாரனை ஒடுக்கிவிட முடியாது.எத்தனை வழக்குப் போட்டாலும் அதை சந்திப்பேன். ஜெயலலிதாவின் அடக்குமுறைகளைக் கண்டு அஞ்சுமஇயக்கம் அல்ல திமுக என்றார்.

இதற்கு மேல் அவரைப் பேச விடாமல் போலீசார் அடாவடியாக வேனில் ஏற்றிக் கொண்டு சென்றனர்.

இந்தச் சம்பவங்களால் சைதாப்பேட்டை நீதிமன்றப் பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்துபாதிக்கப்பட்டது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X