செய்தித் துளிகள்: கோவில், கல்யாணம், உடல், கடத்தல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலை மத்திய தொல்பொருள் துறை தனது கட்டுப்பாட்டில்எடுப்பதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

காங்கிரஸ் எம்.பி. சுதர்ஷன நாச்சியப்பன் தலைமையில் இந்தப் போராட்டம் நடந்தது. காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி.ரங்கநாத் மிஸ்ராவும் இந்த உண்ணாவிரத்தில் பங்கேற்றார்.

கடத்தப்பட்ட தொழிலதிபர் உடனடியாய் மீட்பு

தர்மபுரி:

ராஜஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தர்மபுரியில் வைத்து கடத்தப்பட்டார். அவரை போலீசார் உடனடியாகமீட்டனர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வசந்த் என்ற அந்த தொழிலதிபர் பர்கூர்- தர்மபுரி பகுதி பட்டு நெசவாளர்களுக்கு பட்டு நூல் சப்ளை செய்துவருகிறார். இதற்கான பணத்தை வசூலிக்க மாதம் ஒருமுறை அவர் வருவார். இந்த முறை வந்த அவர் ரூ. 15 லட்சம்பணத்துடன் காரில் தர்மபுரி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவரை காருடன் சேர்ந்து ஒரு கும்பல் கடத்திச் சென்றது. இது குறித்துத் தகவல் கிடைத்தவுடன்போலீசார் தீவிர வாகனை சோதனைகளை நடத்தி அந்தக் காரையும் வசந்தையும் மீட்டனர். கடத்தல்காரர்களையும்பிடித்தனர்.

1,008 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

சென்னை:

இந்து அறநிலையத்துறையின் சார்பில் வரும் ஜூன் மாதத்தில் தமிழகத்தில் 1,008 ஜோடிகளுக்கு இலவச திருமணம்நடத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்தார்.

கடந்த ஆண்டும் இதே போல இலவச திருமணத்தை ஜெயலலிதா நடத்தி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.திருமணமாகாதவர்கள் இதற்கான திட்டத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் ராசி எண் 9. இதனால் 1,008 ஜோடிகளுக்கு இந்த முறை திருமணம் நடத்த உள்ளார்.

காட்டுப் பகுதியில் பெண்ணில் உடல்

ஈரோடு:

சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் பாதி எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

ராமபைலூர் காட்டுப் பகுதியில் நேற்றிரவு இந்த உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது வீரப்பன கும்பல்நடமாட்டம் உள்ள பகுதிகளில் ஒன்றாகும்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+