தமிழகத்தில் 39 சதவீத வீடுகளில் மட்டுமே பாத்ரூம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் வெறும் 39 சதவீத வீடுகளில் மட்டுமே குளியலைறகள் உள்ளதாக 2001ம் ஆண்டின்சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் உள்ள வீடுகள் மற்றும் அவற்றின் வசதிகள் குறித்த கணக்கெடுப்பு 2001ம் ஆண்டுநடைபெற்றது. அதன் அறிக்கையை தமிழக சென்ஸஸ் தலைவர் சந்திரமெளலி இன்றுவெளியிட்டார்.

அதன் கூறப்பட்டுள்ள விவரங்கள்:

கடந்த 1991ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் 1,45,35,455 வீடுகள் இருந்தன. அதுதற்போது 1,69,96,604ஆக அதிகரித்துள்ளது.

சுமார் 49.31 சதவீத தம்பதிகளுக்கு தனி படுக்கை அறை கிடையாது. மாநிலத்தில் மொத்தம்1,18,57,071 தம்பதிகள் உள்ளனர். ஒரு வீட்டுக்கு 0.84 சதவீத திருமணமான தம்பதிகள் உள்ளனர்.(அதாவது வீட்டுக்கு சுமார் ஒரு தம்பதி)

24.24 சதவீத வீடுகளில் திருமணமான தம்பதிகள் யாரும் இல்லை.

மேலும் 1,41,73,626 வீடுகளில் 39.89 சதவீத வீடுகளில் மட்டுமே வீட்டுக்குள்ளேயே குளியலறைவசதி உள்ளது.

தமிழகத்தில் சுமார் 58.52 சதவீத மக்கள் மட்டுமே நிரந்தரமாக ஒரு வீட்டில் தங்கியுள்ளனர். சுமார்23.31 சதவீத மக்கள் அவ்வப்போது வீடுகளை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். மேலும் 18.15சதவீத மக்கள் வேறு இடத்தில் தங்கி விட்டு மீண்டும் சொந்த வீட்டிற்கே வந்து விடுகின்றனர்.

சுமார் 78.18 சதவீத மக்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். முந்தைய கணக்கெடுப்பில்இது 54.75 சதவீதமாகத்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 21.08 சதவீத மக்கள்கெரசின் விளக்குகளையே பயன்படுத்தி வருகின்றனர்.

சுமார் 0.38 சதவீத மக்களின் வீடுகள் இருண்ட வீடுகள்தான். அவர்களுடைய வீட்டில் மின்சாரவிளக்கும் கிடையாது. கெரசின் விளக்கும் கிடையாது.

சமையலுக்கென விறகுகளை மட்டுமே சுமார் 64.26 சதவீத மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சுமார்19.08 சதவீதம் பேர் காஸ் அடுப்புகளைப் பயன்படுத்துகிறார்கள். மேலும் 13.09 சதவீதம் மக்கள்கெரசின் ஸ்டவ்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

96 சதவீத வீடுகளுக்கு அருகில் உள்ள நகராட்சி குழாய்கள், அடி குழாய்கள், போர்வெல் குழாய்கள்அல்லது கிணறுகள் மூலம் மக்களுக்கு குடிநீர் கிடைக்கிறது. ஆனால் ஆண்டு முழுவதும் குடிநீர்கிடைக்கிறா என்பது மிகப் பெரும் கேள்விக் குறிதான்.

கடந்த 1991ம் ஆண்டு கணக்கெடுப்பின்போது இருந்ததை விட தற்போது குறைவானவீடுகளில்தான் குடிநீர் வசதி இருப்பதாகவும் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

இதைத் தவிர 67.11 சதவீத வீடுகள் மட்டுமே தனி சமையல் அறைகளைக் கொண்டுள்ளன. 20.17சதவீத வீடுகளில் தனி சமையல் அறை கிடையாது.

மேலும் சுமார் 43.55 சதவீத வீடுகளில் ரேடியோவும், 39.48 சதவீத வீடுகளில் டி.வியும், 11.24சதவீத வீடுகளில் தொலைபேசியும், 42.44 சதவீத வீடுகளில் சைக்கிளும், 16.09 சதவீத வீடுகளில்பைக்கும், 2.18 சதவீத வீடுகளில் கார், ஜீப் போன்ற 4 சக்கர வாகனங்களும் உள்ளன.

கிராமப் பகுதிகளில் 40.06 சதவீத வீடுகளிலும், நகர்ப் பகுதிகளில் 21.60 வீடுகளிலும்ரேடியோ உள்பட இந்தப் பொருள்கள் ஏதும் இல்லை. அவர்கள் பரம ஏழைகள்.

69 சதவீத வீடுகள் ஒன்று அல்லது இரண்டு அறைகளை மட்டுமே கொண்டுள்ளன. 19.87 சதவீதவீடுகளில் தான் 3 அறைகள் உள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+