For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பகல் நேர பஸ்களில் கட்டணம் குறைப்பு: டவுன் பஸ்களில் ரேடியோ

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் இயக்கப்படும் அதிவிரைவுப் பேருந்துகளின் கட்டணம் குறைக்கப்படவுள்ளது.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தமிழகத்திற்குள் இயக்கும் பகல் நேர செமி டீலக்ஸ் பஸ்கள்மற்றும் சொகுசு பஸ்கள் ஆகியவற்றின் கட்டணம் வரும் மே 1ம் தேதி முதல் குறைக்கப்படும். இனிஇந்தக் கட்டணம் புறநகர் பஸ்களில் வசூலிக்கப்படும் கட்டண அளவிலேயே இருக்கும்.

இது தவிர தமிழகத்தில் பஸ் பயணிகளுக்கு பல புதிய சலுகைகளை மாநில போக்குவரத்துத் துறைஅமைச்சர் விஸ்வநாதன் அறிவித்துள்ளார். அனைத்து டவுன் பஸ்களிலும் எப்.எம். ரேடியோவசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தமிழக சட்டசபையில் போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது.விவாதத்தைத் தொடர்ந்து விஸ்வநாதன் பதிலளித்துப் பேசுகையில்,

சென்னையிலிருந்து வெளி மாநிலங்களுக்குச் செல்லும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகபஸ்களில் முன் பதிவு செய்தவர்கள் சென்னையில் உள்ள அரசு டவுன் பஸ்களில் இலவசமாகப்பயணம் செய்யலாம்.

அதாவது சென்னையில் அவர்கள் வசிக்கும் இடங்களிலிருந்து கோயம்பேடு பஸ் நிலையத்திற்குமாநகர டவுண் பஸ்களில் இலவசமாகச் செல்லலாம். வெளி மாநிலப் பஸ் கிளம்புவதற்கு முன் 2 மணிநேரத்திற்குள் இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சென்னையில் இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் மாநிலத்தில் பிற பகுதிகளுக்கும் இதுஅறிமுகப்படுத்தப்படும்.

அதேபோல் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ்களில் முன் பதிவு செய்பவர்கள், சேரும்இடத்திலிருந்து புறப்படும் இடம் வரை திரும்பி வருவதற்கும் சேர்த்து ஒரே நேரத்தில் முன் பதிவுசெய்தால் (return ticket) அவர்களுக்கு பயணக் கட்டணத்திலிருந்து 10 சதவீதம் விலக்குஅளிக்கப்படும்.

அனைத்து டவுன் பஸ்களிலும், மாநகரப் போக்குவரத்துக் கழக பஸ் ஸ்டாண்டுகளிலும் ஒப்பந்தஅடிப்படையில் தனியார் மூலம் எப்.எம். ரேடியோ ஒலிபரப்பு வசதி அமைக்கப்படும்.

இதன் மூலம் திரைப்படப் பாடல்களைக் கேட்டு மகிழ்வதோடு போக்குவரத்து தொடர்பானபாதுகாப்புக்குத் தேவையான முக்கியச் செய்திகள் மற்றும் பயனுள்ள அறிவிப்புகளையும் பயணிகள்தெரிந்து கொள்ளலாம். சென்னையில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் ஒப்பந்த ஊர்தி முறையில் இயக்கப்படும் தமிழகஅரசு பஸ்களின் வாடகைக் கட்டணம் ரூ.6,500லிருந்து ரூ.2,000ஆகக் குறைக்கப்படுகிறது.

மேலும் ஓடும் தூரத்தின் அடிப்படையில் (குறைந்த பட்சம் 100 கி.மீ.) ஒரு கி.மீக்கு ரூ.15வசூலிக்கப்படும்.

சாலைப் போக்குவரத்து நிறுவனத்தால் நடத்தப்படும் பெருந்துறை மருத்தவக் கல்லூரியில்எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 60லிருந்து 100ஆக உயர்த்தநடவடிக்கை மேற்கொள்ளப்படும். போக்குவரத்துக் கழக ஊழியர்களின் குழந்தைகளுக்கு இதன்மூலம் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படும்.

சென்னை தரமணியில் உள்ள சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகத்தில் ஓட்டுனர் பயிற்சிக்காகரூ.50 லட்சம் செலவில் புதிய ஓட்டுனர் பயிற்சித் தளம் அமைக்கப்பட உள்ளது.

சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் தஞ்சாவூர், கன்னியாகுமரி ஆகிய இடங்களில்விமான நிலையங்கள் அமைக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்படும் என்றார்விஸ்வநாதன்.

இலவச பஸ் பாஸ் ரத்தாகுமா?

இதற்கிடையே பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் இலவச பஸ் பாஸ்களுக்கானஅரசு மானியம் ரூ.85 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விஸ்வநாதன் கூறுகையில், இலவச பஸ் பாஸ்திட்டத்திற்கு ஆண்டுதோறும் ரூ.250கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் அரசின் நிதிச்சுமை காரணமாக இந்தத் தொகை ரூ.85 கோடியாககுறைக்கப்படுகிறது என்றார்.

இதனால் இலவச பஸ் பாஸ் ரத்து செய்யப்படலாம் என்று தெரிகிறது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X