கோவை சிறையில் ஆயுள் கைதி திடீர் சாவு: 1,000 கைதிகள் உண்ணாவிரதம்
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மத்திய சிறையில் உடல் நலக் குறைவு காரணமாக ஆயுள் தண்டனைக் கைதி ஒருவர்இறந்தார்.
ஆனால் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் அவர் பிழைத்திருப்பார் என்று கூறி அங்குள்ள சுமார்1,000 கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணப்பன் என்பவர் கடந்த 1996ம் ஆண்டு ஒருவரைக் கொலைசெய்தது தொடர்பாக 1998ம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார்.
கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கந்தப்பனுக்கு இன்று அதிகாலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அதிகாலை 5 மணிக்கு கந்தப்பன் இறந்து விட்டதாகத்தெரிவிக்கப்பட்டது. இதைக் கேள்விப்பட்டதும் இதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுமார் 1,000கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கந்தப்பனுக்கு உடனடியாக உரிய முறையில் சிகிச்சை அளித்தால் அவரைக் காப்பாற்றி இருக்கலாம்.ஆனால் சிறை அதிகாரிகளின் அலட்சியம் காரணமாகவே அவர் இறந்து விட்டார் என்று குற்றம்சாட்டிய கைதிகள் இன்று காலையும் மதியமும் வழங்கப்பட்ட உணவை சாப்பிட மறுத்தனர்.
இதனால் சிறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கைதிகளைச் சமாதானப்படுத்தும் முயற்சியில்சிறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.


