For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரை மணி நேரத்தில் 12 மசோதாக்கள்!!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று அரை மணி நேரத்தில் 12 சட்ட மசோதாக்கள் எந்தவிதமானவிவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டன.

விவாதத்குக்கே அனுமதி தராமல் எப்படி சட்டங்களை நிறைவேற்றலாம் என எதிர்க் கட்சியினர் கேள்வி எழுப்பினர். ஆனால், அதைசபாநாயகர் கண்டுகொள்ளவில்லை.

இன்று அவை கூடியதுமே மார்க்சிஸ்ட் உறுப்பினர் ஹேமச்சந்திரன் இது தொடர்பாக பிரச்சனையைக் கிளப்பினார். அவர் கூறியதாவது:

இன்று காலை 8 மணிக்குத் தான் புதிய சட்ட மசோத்தக்கள் குறித்த நகல்களே எம்.எல்.ஏக்களுக்குத் தரப்பட்டன. இதைப் படித்துப்பார்க்காவது அவகாசம் தர வேண்டும். இந்த சட்ட மசோதாக்கள் மீது விவாதம் நடத்த சட்டமன்றக் கூட்டத் தொடரை திங்கள்கிழமை வரைநீட்டிக்க வேண்டும் என்றார்.

ஆனால், அவரது கோரிக்கையை நிராகரித்த காளிமுத்து, சட்டமன்றம் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார்.

இதன் பின்னர் வெளியே வந்த எதிர்க் கட்சியினர் அரசை மிகக் கடுமையாக விமர்சித்தனர்.

காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் கூறுகையில், சட்டமன்ற ஜனநாயகம் என்றாலே விவாதம் தான்.Discussions and debate தான் ஜனநாயகம். அதையே தூக்கி வீசிவிட்டு இவர்கள் என்ன அரசாங்கம் நடத்துகிறார்கள் என்றுதெரியவில்லை.

சட்டமன்றத்தை அதிமுகவினர் மனமகிழ் மன்ற கிளப் என்று நினைத்துவிட்டார்கள். அவர்களை அவர்களே பாராட்டியே கூட்டத் தொடரைஓட்டிவிட்டார்கள். எதிர்க் கட்சிகளுக்கு உரிய மரியாதையோ, பேசுவதற்கான உரிமையோ வழங்கப்படவில்லை.

அரசிடம் விளக்கம் கேட்டால் சரியான விளக்கம் கொடுக்கப்படவில்லை, அப்படியே தரப்பில் ஏதாவதுகூறப்பட்டாலும் கூட அவை உருப்படியான பதில்களாக இருக்கவில்லை என்றார்.

பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி கூறுகையில், அரை மணி நேரத்தில் 12 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது தமிழக சட்டமன்றவரலாற்றிலேயே இது தான் முதல்முறையாகும். இங்கு எதிர்க் கட்சிகளை பேசவே விடவில்லை.

அவர்களே பேசினார்கள். அதிலும் எதிர்க் கட்சிகளைத் திட்டுவது, கொச்சைப்படுத்துவது,

கிண்டல், கேலி செய்வது, கேவலப்படுத்துவது, அவமானப்படுத்து போன்றவை தான் நடந்தன என்றார்.

மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. கருணாகரன் கூறுகையில், எதிர்க் கட்சியினரைத் தூண்டிவிடும் வகையில், ஆத்திரமூட்டும் வகையில் இந்தக்கூட்டத் தொடர் முழுவதும் சில அதிமுகவினர் பேசினர். அதைத் தடுக்க காளிமுத்து தவறிவிட்டார் என்றார்.

ஜெயலலிதா ஹைதராபாத் பயணம்:

சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிவடைந்ததையடுத்து ஜெயலலிதா ஹைதராபாத் சென்று ஓய்வெடுப்பார் என்று தெரிகிறது. அதற்கு முன்கவர்னாரையும் அவர் சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.

அப்போது சில அமைச்சர்களின் தலைகள் உருளும் என்றும் கூறப்படுகிறது.

டான்சி தீர்ப்பு எந்த நேரத்திலும் வரலாம் என எதிர்பார்த்துக் கொண்டுள்ள ஜெயலலிதா, அதற்கேற்ப சில அவசர ஏற்பாடுகளையும் தயார்செய்து வைத்துள்ளதாகத் தெரிகிறது. இந்தத் தீர்ப்பை எதிர்பார்த்தே வரும் 14ம் தேதி வரை நடக்க இருந்த சட்டமன்றக் கூட்டத் தொடரைஇன்றே முடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X