மெதுவாய் நகர்ந்து வருகிறது புயல் சின்னம்
சென்னை:
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் புயல் சின்னம் காரணமாக நேற்றிரவு முதல் கன மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சிநிலையம் எச்சரிக்கை செய்திருந்தது. ஆனால், புயல் மிக மெதுவாக நகர்ந்து வருவதால் இதுவரை ஒரு சொட்டு கூட மழை பெய்யவில்லை.
மிக மெதுவாக நகர்ந்து வரும் இந்த புயல் சின்னம் நாளை தான் வட கடலோர தமிழக- ஆந்திர எல்லையைத் தொடும் என்று வானிலைஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் நாளை முதல் கன மழை பெய்யும் என்றும் கூறியுள்ளது.
புயல் சின்னம் கடுமையாக இருந்தபோதிலும், ஆந்திராவையே இது அதிகம் தாக்கும் என்பதால் தமிழகத்திற்கு பெரிய அளவில் புயல்ஆபத்து ஏதும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்பட தமிழகத்தின் வட பகுதிகள் அனைத்திலும் நேற்றில் இருந்தே மேகம் மூட்டம் நிலவுகிறது. வெயிலே இல்லை. இருப்பினும்கடந்த இரண்டு நாட்களாக மழை வரும், மழை வரும் என்று கூறி வராமல் போய்விட்டது.
தென் தமிழகத்தில் திடீர் கன மழை:
இதற்கிடையே, வட மாவட்டங்களில் வரும் என்று கூறப்பட்ட கன மழை தென் கடலோர மாவட்டங்களை விளாசித் தள்ளி விட்டது.ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்றிரவு கன மழை பெய்தது. இன்று காலையும் கன மழை பெய்து வருகிறது. அதேபோல, தூத்துக்குடிமாவட்டத்திலும் கன மழை பெய்து வருகிறது. சூறாவளிக் காற்றுடன் மழை பெய்து வருவதால், பல வீடுகள் சேதமடைந்து உள்ளன.
நாளை முதல் தமிழகத்தின் விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் தெற்கு ஆந்திர பிரதேசம் ஆகிய பகுதிகளில்பலத்த சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இப் பகுதி மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீண்டும்எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று தமிழக கடல் பகுதியில் இருந்து 650 கி.மீ. தூரத்தில் வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த புயல் சின்னம் இரவு முழுவதும் ஒரேஇடத்தில் நிலை கொண்டிருந்தது. இன்று காலை முதல் மெதுவாக நகர்ந்தது. காலை 11.30 மணியளவில் 600 கி.மீ. தொலைவில் மையம்கொண்டிருந்தது.
இது மெதுவாக தொடர்ந்து தமிழக- ஆந்திர எல்லை நோக்கி நகர்ந்து வருகிறது. இது கரையைக் கடக்கும்போது மிக பலத்த சூறாவளிக்காற்று வீசும்.
சென்னை நகரில் கன மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் மக்களைக் காப்பதற்கும், மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கும்சென்னை மாநகராட்சி விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications