மாஜி முதல்வர் பன்னீரே...: ராமதாஸ் கடும் பதிலடி
சென்னை:
எங்களுக்கு எல்லாம் தெரியும், எல்லாம் தெரியும் என்று சொல்லி இந்த ஆண்டும் காவிரி நீரை ஜெயலலிதா அரசுகோட்டை விட்டுவிடக் கூடாது பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
காவிரி விவகாரத்தை வைத்து அதிமுகவுக்கும் பா.மகவுக்கும் இடையே அறிக்கைப் போர் நடந்து வருகிறது.ராமதாஸை எலி என்றும் முதல்வர் ஜெயலலிதாவை சிங்கம் என்றும் வர்ணித்து லேட்டஸ்டாய் அறிக்கை விட்டார்அமைச்சர் பன்னீர்செல்வம். அதில் எல்லாம் தெரிந்த ஜெயலலிதாவுக்கு அறிவுரை கூற ராமதாசுக்கு என்னயோக்கியதை இருக்கிறது என்று கேட்டிருந்தார்.
அவருக்கு பதிலளித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
மேட்டூர் அணை வரலாறு காணாத அளவுக்கு வறண்டு கிடக்கிறது. காவிரி நீரைப் பெற பிரதமரைச் சந்தித்துமுதல்வர் பேச வேண்டும் என்று சொன்னால் ஜெயலலிதாவுக்கு ஏன் கோபம் வருகிறது?
எனக்கு ஆலோசனை சொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று முதலில் ஜெயலலிதா சட்டசபையில்கூறியிருந்தார். இப்போது அவர் சார்பில் இடைக்கால முதல்வராக இருந்தவரும், அந்தப் பதவி காலத்தில் சட்டசபையையே சந்திக்காத பெருமை உள்ளவருமான பன்னீர்செல்வம் என் மீது வசை பாடியிருக்கிறார்.
ஜெயலலிதாவைப் பாராட்டியும் மற்றவர்களை ஏளனம் செய்தும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெட்டிப்பெருமை தான் மலிந்து கிடக்கிறது. அரசியல் அழிவுக்கு முந்தியது அகந்தை, வீழ்ச்சிக்கு முந்தியது வீண் பெருமைஎன்ற நீதிமொழி தான் எனக்கு நினைவுக்கு வருகிறது பன்னீர் அறிக்கையைப் பார்த்தால்.
காவிரிப் பிரச்சனையில் எல்லாம் தெரிந்த ஒரே ஒருவர் புரட்சித் தலைவி அம்மா தான் என்று இந்த தாற்காலிகமுதலமைச்சர் பெருமைப்பட்டுக் கொள்கிறார். இப்படிச் சொல்லாவிட்டால் பன்னீர் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கமுடியாது என்பதை நான் அறிவேன்.
காவிரி நீரைப் பெறப் போவது புரட்சித் தலைவி அம்மா தான் என்று இந்த மாஜி முதல்வர் தம்பட்டம் அடிக்கிறார்.
ஆனால், தமிழக வரலாற்றில் ஒரே ஆண்டில் குறுவை, சம்பா, தாளடி என தொடர்ச்சியாக மூன்று போகமும்பொய்த்தது இது தான் முதல் முறை. அதுவும் ஜெயலலிதா ஆட்சியில் தான் நடந்தது. இப்போது நான்காவதுபோகமும் பொய்த்துவிடக் கூடாது என்று தான் வரும் முன் காப்போம் என்ற முறையில் நடந்து கொள்ளச்சொன்னேன்.
இது தவறா?. இருமாப்பின் உச்சாணிக்குப் போய் உட்கார்ந்து கொண்டுள்ள ஜெயலலிதா எனக்கு நீங்கள்ஆலோசனை சொல்ல வேண்டாம் என்று கூறியிருக்கிறார். நேற்றைய தோல்வியை மறக்கக் கூடாது. மறந்தவர்கள்மீண்டும் ஆட்சிக்கு வந்ததாய் சரித்திரம் இல்லை.
எல்லாம் தெரியும் எங்களுக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லி காவிரி நீரை மீண்டும் கோட்டை விட்டு மீண்டும்விவசாயி வயிற்றில் அடித்துவிடக் கூடாது ஜெயலலிதா. நல்ல யோசனைகளை ஏற்க பக்குவம் வேண்டும். அதுஇவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.
இவ்வாறு ராமதாஸ் கூறியிருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications