ஜெயலலிதா தான்.. ஜெயலலிதா தான்..: பன்னீர் அறிக்கை
சென்னை:
காவரி விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆலோசனை கூறி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கைக்குஅமைச்சர் பன்னீர்செல்வம் மூலம் பதிலடி தரப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை அமைச்சர் பன்னீர்செலவம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை:
முட்டாள்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது அறிவாளிகள் விழித்துக் கொண்டிருக்கின்றனர் என்று ஒரு பழமொழிஉண்டு.
தமிழகத்தின் பிரச்சனைகள் பற்றி என்றோ ஒரு நாள் குரல் கொடுத்துவிட்டு, மற்ற நாட்களில் அதைப் பற்றிஎள்ளளவும் கவலைப்படாதவர்களே அதிகம் உள்ள தமிழகத்தில் அல்லும் பகலும் தமிழகத்தின் உரிமைகளைப்பெறுவதற்காகவே போராடிக் கொண்டிக்கும் தலைவர் உண்டு என்றால் உது தலைவி ஜெயலலிதா தான்.
காவிரிப் பிரச்சனை குறித்து அனைத்து அம்சங்களும் தெரிந்தவர் ஒருவர் உண்டு என்றால் அது ஜெயலலிதா தான்.
அந்தக் காவிரி நீரை எப்படியும் பெற்றே தீர்வது என்ற லட்சிய நோக்கம் உடையவர் ஒருவர் உண்டு.
அந்தக் காவிரி நீரை டெல்டா விவசாயிகளுக்கு பெற்றுத் தரப் போகிறவர் ஒருவர் உண்டு என்றால் அவர்ஜெயலலிதா தான்.
அப்படிப்பட்ட முதல்வருக்கு அறிவுரைகள் வழங்கி அறிக்கை விடுவதை ராமதாஸ் இத்துடன் நிறுத்திக் கொள்ளவேண்டும். ஒரே மண்ணில் முளைத்திருக்கிறோம் என்ற ஒரே தகுதியை மட்டும் வைத்துக் கொண்டு அருகம் புல்,ஆலமரத்துக்கு ஆலோசனை சொல்வதா?.
சிங்கத்துக்கு சிறுநரிகள் ஆலோசனை சொல்வது சிந்தனைக்குரிய விஷயமல்ல, சிரிப்புக்குரிய விஷயம். புரிந்துகொண்டால் சரி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. (அடுக்கு மொழியில் இந்த அறிக்கையை பன்னீருக்கு எழுதித் தந்தது யாரோ?).


