For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜூன் 14 முதல் இன்னொரு தமிழ் சாட்டிலைட் டிவி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இணைந்து ஆரம்பிக்கும்தமிழ் திரை என்ற புதிய டிவி ஜூன் மாதம் 14ம் தேதி முதல் ஒளிபரப்பைத் தொடங்குகிறது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முயற்சியுடன் தொடங்கப்படும் இந்த டிவியின் நிர்வாகஇயக்குனராக டைரக்டர் ஆர்.கே.செல்வமணி நியமிக்கப்பட்டுள்ளார்.

இயக்குனர்கள் பாரதிராஜா, மணிரத்தினம் உள்ளிட்ட பெரும் தலைகள் இடம் பெற்றுள்ள 15 பேர்கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. டிவியின் செயல்பாட்டை இந்தக் குழு நேரடியாகக்கண்காணிக்கும்.

தமிழில் 5 சாட்டிலைட் டிவி சேனல்கள் உள்ளன. இவற்றில் 80 சதவீதம் சினிமா நிகழ்ச்சிகள் தான்ஒளிபரப்பப்படுகின்றன. இதன்மூலம் இந்த சேனல்கள் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டிக்கொண்டுள்ளன. ஆனால், சினிமா எடுக்கும் தயாரிப்பாளர்கள் நடுத்தெருவுக்கு வந்துகொண்டுள்ளனர்.

தங்களை வைத்து டிவி சானல்கள் கொழுத்து வருவதை அனுமதிப்பதைவிட நாமே ஒரு சேனல்ஆரம்பித்து நடத்தினால் என்ன என்ற சினிமா தயாரிப்பாளர்களுக்கு வந்த யோசனையின்காரணமாகவே தமிழ்திரை டிவி உருவாகியுள்ளது.

மேலும் திருட்டு விசிடி மற்றும் தனியார் டிவிக்களால் தான் படங்களே சரியாக ஓடுவதில்லை என்றுதயாரிப்பாளர்கள் புகார் கூறி வருகின்றனர். தயாரிக்கப்பட்ட படங்களை தியேட்டருக்கு வந்த ஒருமாதத்திலேயே போட்டி போட்டுக் கொண்டு தனியார் டிவிக்கள் வாங்கி திரையிட்டு விடுகின்றன.

ஓடாத படங்களால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட அதை அடிமாட்டு விலைக்கு டிவி சானல்களுக்குதயாரிப்பாளர்கள் விற்கின்றனர். இதனால் படத்தை அவுட்-ரைட் முறையில் வாங்கியவினியோகஸ்தர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதனால் தயாரிப்பாளர்கள்- வினியோகஸ்தர்கள்மோதல் ஒரு பக்கம் வெடித்து வருகிறது.

மேலும் புதிய படங்களின் டிரைலர்கள், பாடல் காட்சிகளை தனியார் டிவிக்கள் மிகக் குறைந்தவிலைக்கே வாங்குகின்றன. இதன் விலையைக் கூட்டவும் முடியவில்லை. படங்களுக்கு போதியவிளம்பரம் தேடுவதற்காக தனியார் டிவிக்களை பகைத்துக் கொள்ள முடியாத நிலையில்தயாரிப்பாளர்கள் உள்ளனர்.

இதனால் அவர்கள் கேட்கும் விலைக்கே டிரைலரைத் தர வேண்டியுள்ளது. இதற்கெல்லாம் முடிவுகட்ட தயாரிப்பாளர்கள் முடிவு செய்ததன் விளைவு தான் புதிதாதத் தோன்றியுள்ள தமிழ்த்திரை டிவிசேனல்.

இனி புதிய படங்களுக்கான விளம்பரம் இதில் தான் வரும். டிரைலர் இதில் தான் காட்டப்படும். புதியபாடல் காட்சிகளும் இந்த டிவியில் தான் முதலில் காட்டப்படும். சினிமா தொடர்பான மற்றநிகழ்ச்சிகளும் அதில் தான் முதலில் காட்டப்படும். இதனால், இதை வைத்துப் பிழைத்துக் கொண்டேசினிமாவை நசுக்கி வரும் தனியார் டிவி சேனல்களின் ஆதிக்கம் பெருமளவில் குறையும் என்றுதெரிகிறது.

மேலும் தயாரிப்பாளர்கள் இனி தங்கள் படங்களை மற்ற டிவிக்களுக்கு விற்காமல் இனி இதிலேயேகாட்டவும் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் மூலம் கிடைக்கும் வருவாயை தயாரிப்பாளர்கள்தங்கள் சங்கத்தின் மூலமாக பிரித்துக் கொள்ள உள்ளனர்.

ஜூன் 14ம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெறும் இந்த டிவியின் தொடக்க விழாவில்பங்கேற்க கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இந்த தமிழ் திரை டிவியில், புது படங்களின் தொகுப்புகள், நடிகர், நடிகையரின் பேட்டிகள்,திரையுலகம் குறித்த செய்திகள் இடம் பெறும். கேபிள் டிவி ஆபரேட்டர்களின் ஒத்துழைப்புடன் இந்ததமிழ் திரை தமிழகம் முழுவதும் தெரியும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புதுப் படங்கள் குறித்த செய்திகள், டிரைலர்களை இனி தனியார் டிவி சானல்களுக்குதயாரிப்பாளர்கள் விற்க மாட்டார்கள். இனிமேல் தமிழ் திரை மூலமே புதுப் படங்கள் விளம்பரம்செய்யப்படும்.

இதன் லம் இந்தியத் தொலைக்காட்சியில் தல் றையாக என்ற வசனத்துடன் புத்தம் புதுப்படங்கள் தனியார் தொலைக்காட்சிகளில் வெளியிட தடை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X