மின்சார ரயில் மோதி ஒரே நாளில் 4 பேர் பலி
சென்னை:
சென்னையில் மின்சார ரயில் மோதி ஒரே நாளில் 4 பேர் பலியானார்கள்.
தூத்துக்குடியைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவர் கிண்டிக்கும், பரங்கிமலை ரயில் நிலையத்திற்கும் இடையேதண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு இறந்தார். இவருக்கு ஜூன் 9ம் தேதி கல்யாணம்நிச்சயமாகியிருந்தது.
சென்னையில் தங்கியிருந்த அவர், தனது நண்பர்களுக்கு கல்யாண அழைப்பிதழை கொடுக்கச் சென்றுகொண்டிருந்தபோது இந்தப் பரிதாபம் நிகழ்ந்தது. பொன்ராஜுக்கு வயது 31.
மற்றொரு சம்பவத்தில் பட்டரைவாக்கம், அம்பத்தூர் ரயில் நிலையங்களுக்கிடையே 30 வயது மதிக்கத்தக்கஇளைஞர் பலியானார்.
அதேபோல கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் விஜயக்குமார் என்பவர் ரயில் மோதி பலியானார். இன்னொருசம்பவத்தில், சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில்தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 61 வயது முதியவர் பரிதாபமாகப்பலியானார்.
ரயில் வருவது தெரியாமலும், சரியாக கவனிக்காமல் இஷ்டம்போல தண்டவாளங்களைக் கடப்பதால்தான்இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


