தாற்காலிக நிர்வாகம்: புலிகள் கோரிக்கை- ரணில் ஏற்பு
டோக்கியோ:
புலிகள் கோரியுள்ளபடி வட கிழக்குப் பகுதியில் இடைக்கால நிர்வாகத்தை அமைக்கத் தயாராக இருப்பதாகஇலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அறிவித்துள்ளார்.
இலங்கையின் வட-கிழக்குப் பகுதிகளில் மறு கட்டமைப்புப் பணிகளுக்கு நிதி உதவி செய்வது தொடர்பானஜப்பான் நன்கொடையாளர் மாநாடு இன்று தொடங்கியது. இதில் தமிழர் பகுதிகளை மறுசீரமைக்க 2 பில்லியன்டாலர்கள் தர நன்கொடையாளர் நாடுகள் முன் வந்துள்ளன.
இந்த மாநாட்டில் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பங்கேற்றுள்ளார். ஆனால், ஏற்கனவேஅறிவித்திருந்தது போல விடுதலைப் புலிகள் இந்த மாநாட்டைப் புறக்கணித்துவிட்டனர்.
மாநாட்டில் ரணில் கூறியதாவது:
இந்த மாநாட்டில் புலிகள் பங்கேற்காதது வருத்தம் தருகிறது. மீண்டும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும்வகையில் புலிகளுக்கு கூடுதல் அதிகாரம் தர எங்கள் அரசு தயாராக உள்ளது.
வட-கிழக்குப் பகுதியில் புலிகள் கோரியுள்ளபடி ஒரு தாற்காலிக நிர்வாகத்தை அமைக்க அனுமதி தர நான்தயாராக உள்ளேன். இந்த தாற்காலிக நிர்வாகத்தில் புலிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்படும். கூடுதல்அதிகாரமும் தரப்படும்.
வட கிழக்குப் பகுதிகளை மறு சீரமைக்கும் பணிகளில் இந்த நிர்வாகம் ஈடுபடும். இந்த தாற்காலிக நிர்வாகத்தைஅமைப்பதற்கு எங்கள் தரப்பில் எந்த எதிர்ப்பும் இல்லை. அந்த நிர்வாகத்தை அமைப்பது தொடர்பானநடவடிக்கைளை எடுக்க வேண்டியது தான் இப்போதைய முக்கியமான பணியாகும்.
இந்த இடைக்கால நிர்வாகத்தில் அனைத்து இனத்தினரின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்றார் ரணில்.
ரணிலின் இந்த அறிவிப்பையடுத்து புலிகள் மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வழி பிறந்துள்ளது. ஆனால்,அதிபர் சந்திரிகாவின் எதிர்ப்பையும் மீறி ரணில் எப்படி இடைக்கால நிர்வாகத்தை அமைக்கப் போகிறார் என்றுதெரியவில்லை.
இதுவரை நடந்த 6 சுற்றுப் பேச்சுவார்த்தைகளிலும் இடைக்கால நிர்வாகம் அமைப்பதைத் தான் புலிகள் முக்கியகோரிக்கையாக முன் வைத்தனர். ஆனால், பேச்சுக்கள் தான் தொடர்ந்ததே தவிர தங்களது எந்த முக்கியகோரிக்கையும் நிறைவேற்றப்படாததையடுத்து பேச்சுவார்த்தைகளில் இருந்து 7 வாரங்களுக்கு முன் புலிகள்வெளியேறினர்.
இதையடுத்து வடகிழக்குப் பகுதியில் மறுசீரமைப்புப் பணிகளில் ஈடுபட நிதிச் சுதந்திரம் தருவதாக,பேச்சுவார்த்தைக்கு வருமாறும் ரணில் அழைத்தார். ஆனால், நிதிச் சுதந்திரம் எல்லாம் தேவையில்லை, வட கிழக்குப்பகுதியில் எங்கள் தலைமையில் இடைக்கால நிர்வாகத்தை உடனே அமைத்தால் தான் இனி பேச்சுவார்த்தைக்கு முன்வருவோம் என புலிகள் கூறிவிட்டனர்.
அதே நேரத்தில் போர்ப் பாதைக்கும் திரும்ப மாட்டோம் எனவும் உறுதிமொழி தந்தனர். இதையடுத்து புலிகளைஎப்படியாவது ஜப்பான் மாநாட்டில் பங்கேற்கச் செய்ய நார்வே தலைமையில் ஐரோப்பிய யூனியன் நாடுகள்முயன்றன.
ஆனால், புலிகள் விட்டுத் தர மறுத்துவிட்டனர். நன்கொடையாளர் மாநாட்டையும் புறக்கணித்துவிட்டனர்.
நாளையும் இந்த மாநாடு நடக்கவுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications