For Daily Alerts
Just In
அத்வானிக்கு வைகோ ஆதரவு
சென்னை:
பாபர் மசூதியை அத்வானி தான் தூண்டிவிட்டு இடிக்கச் சொன்னார் என்று சில கரசேகவர்கள் கூறியுள்ளகுற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என மதிமுக தலைவர் வைகோ கூறினார்.
பிரதமர் வாஜ்பாய்க்கும் துணைப் பிரதமர் அத்வானிக்கும் மோதல் எழுந்துள்ளதாக கூறப்படுவது உண்மையில்லை.தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாஜ்பாய் தான் தலைவர். இதை அத்வானியே பலமுறை கூறியுள்ளார்.
அத்வானி எதையும் வெளிப்படையாக பேசிவிடுபவர். பாபர் மசூதி இடிக்கப்பட்ட விஷயத்தில் அவரது தூண்டுதல்இருந்ததாக சிலர் கூறியுள்ளது தவறான குற்றச்சாட்டு என்றார்.
முன்னதாக வைகோ தவிர்த்த மற்ற 8 மதிமுகவினரையும் விடுவிக்க வேண்டும் என்று அக் கட்சியின்வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றத்தில் வாதாடினர். அரசுத் தரப்பு வழக்கறிஞரின் வாதம் 18ம் தேதி நடக்கவுளளது.
அதுவரை வைகோ உள்ளிட்ட 9 பேரையும் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.


