கேரள கவுன்சிலர் சென்னையில் மாயம்: கேர்ள் பிரண்ட் கைது
சென்னை:
சென்னையில் காணாமல் போன கேரள கம்யூனிஸ்ட் கவுன்சிலர் பிரசாத் செபாஸ்டியன் கொலைசெய்யப்பட்டுவிட்டதாகக் கூறப்படும் நிலையில் அவரது கேர்ள் பிரண்ட், அவரது கார் டிரைவரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
இதையடுத்து அவரது சகோதரி போலீசில் புகார் கொடுத்தார். இந் நிலையில் திருவள்ளூர் மாவட்டம்திருவாலங்காடு என்ற இடத்தில் ஒரு பிணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தப் பிணம் பிரசாத்தின் பிணமாகஇருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அடையாளம் காண முடியாத அளவுக்கு பிணம் சிதைந்துபோயுள்ளது. இதனால் டி.என்.ஏ. சோதனைக்குஅனுப்பப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந் நிலையில் பிரசாத்துடன் கடந்த மாதம்மட்டும் 30 முறைக்கும் மேல் சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த இந்திரா என்ற பெண் செல்போனில்பேசியுள்ளது தெரியவந்துள்ளது.
எனவே இவரை போலீஸார் தற்போது கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்திராவின் கார் டிரைவர்திருவாலங்காடு பகுதியைச் சேர்ந்தவர். எனவே அவரும் பிடிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இன்னும் ஓரு நாட்களில் இந்தக் கொலை வழக்கில் துப்பு துலங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திராவுக்கும்பிரசாதுக்கும் பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம், இதையடுத்து தனது டிரைவர் உதவியுடன் இந்திரா அவரைக் கொலைசெய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.


