80% தள்ளுபடியில் டிராக்டர்.. அக்கவுண்டில் மானியம்.. தமிழக கிராமங்களில் மத்திய அரசின் மாஸ் ஸ்கீம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விவசாயத்தில் நவீன இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்று விரும்பும் சிறு, குறு விவசாயிகளுக்கு மத்திய அரசு ஒரு சூப்பரான வாய்ப்பை கொடுத்து வருகிறது.. அதன் பெயர்தான் SMAM - Sub-Mission on Agricultural Mechanisation.. 2014ம் வருடம் தொடங்கப்பட்ட இந்த திட்டம் இன்றும் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு பயனளித்து வருகிறது.. இந்த திட்டம் என்ன, யாருக்கு கிடைக்கும், எப்படி விண்ணப்பிக்கலாம் என்று இங்கே சுருக்கமாக பார்க்கலாம்..

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 2,000 ரூபாய் நிதியுதவியைத் தாண்டி, தமிழகத்தின் கிராமப்புறங்களில் தற்பொழுது இரண்டு மத்திய அரசு திட்டங்களின் பயன்பாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது..

SMAM scheme

வேளாண் இயந்திரமயமாக்கல் துணை இயக்கம் (SMAM) திட்டம்

முதலாவது, அதிக விலையுள்ள வேளாண் இயந்திரங்களை குறைந்த செலவில் கிடைக்கச் செய்யும் எஸ்எம்ஏஎம் (SMAM) திட்டம்.. இரண்டாவது, வறண்ட நிலங்களிலும் பாசன வசதியை மேம்படுத்தும் பிரதமந்திரி கிருஷி சிஞ்சாயி யோஜனா (PMKSY).

இந்த இரண்டு திட்டங்களும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டல விவசாயிகளிடம் தற்பொழுது ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்..

வேளாண் இயந்திரமயமாக்கல் துணை இயக்கம் (SMAM) திட்டத்தின் கீழ், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயி ராமநாதன் கடந்த மாதம் ஒரு பவர்டில்லர் வாங்கியுள்ளார்.. விவசாயப் பணிகளுக்கான கூலி ஆட்கள் பற்றாக்குறை நிலவி வரும் சூழலில், இந்த இயந்திரம் தமக்கு கூலி செலவைக் குறைக்க உதவியுள்ளதாக குறிப்பிடுகிறார்.

2 லட்சம் ரூபாய் நவீன கருவி

பொதுவாக 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு நவீனக் கருவியை, சிறு மற்றும் குறு விவசாயிகள் அல்லது பெண் விவசாயிகளின் பெயரில் விண்ணப்பிக்கும் பொழுது 80 சதவீதம் வரை அரசு மானியம் கிடைக்கிறது.. அதாவது 40,000 ரூபாய் முதலீட்டில் இந்த கருவியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

பெரிய ரக டிராக்டர்களுக்கு 50 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது.. இதனால் தமிழகத்தில் உள்ள வட்டார வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களில் இந்த மானியத்திற்காக விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை நடப்பு 2026 நிதியாண்டில் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்..

கிருஷி சிஞ்சாயி யோஜனா திட்டம்

அடுத்ததாக, தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்காகச் செயல்படுத்தப்படும் கிருஷி சிஞ்சாயி யோஜனா திட்டம்.. தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் தூத்துக்குடி போன்ற வறட்சி பாதிப்புள்ள மாவட்டங்களில் இந்த திட்டத்தின் பயன்பாடு அதிகமாக உள்ளது.

சொட்டுநீர் பாசனம் (Drip Irrigation) மற்றும் தெளிப்புநீர் பாசனம் அமைப்பதற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது..

அரசு தரும் மானியம்

ஒரு ஏக்கர் நிலத்தில் சொட்டுநீர் குழாய்கள் பதிக்க பொதுவாக 30,000 முதல் 40,000 ரூபாய் வரை செலவாகும்.. இத்திட்டத்தின் கீழ் தகுதிபெறும் விவசாயிகளுக்கு அரசாங்கமே முழு செலவையும் ஏற்றுக்கொண்டு, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலமாக நேரடியாக நிலத்திலேயே கட்டணமில்லாமல் அமைத்துத் தருகிறது..

கிணற்றுப் பாசனம் மற்றும் ஆழ்துளை கிணறு வைத்திருக்கும் தமிழக விவசாயிகள் கோடை காலத்தில் தண்ணீர் வீணாவதைத் தடுக்க இந்த முறையை அதிகமாக தேர்வு செய்து வருகின்றனர்..

விவசாயிகளுக்கு உழவன் செயலி

இந்த இரண்டு திட்டங்களுக்கும் உழவன் செயலி (Uzhavan App) அல்லது மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேரடியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.. நிலத்தின் பட்டா, சிட்டா, ஆதார் கார்டு மற்றும் வங்கி கணக்கு விவரங்களைச் சமர்ப்பித்து விவசாயிகள் இதில் இணையலாம்..

இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக அதிகாரிகளால் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் மானியங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.. பிஎம் கிசான் கணக்கு விவரங்களை வைத்தே இதற்கான தகுதிகளும் எளிதாக சரிபார்க்கப்படுவதால், கிராமப்புறங்களில் இதற்கான விண்ணப்பப் பதிவுகள் தற்பொழுது அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+