தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீர் கூட தர முடியாது: கேரள முதல்வர்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்:

எந்தக் காரணத்தை முன்னிட்டும் கேரள நதிகளை தமிழக நதிகளுடன் இணைக்க விட மாட்டோம்.தமிழகத்துக்குசொட்டு நீர் கூடத் தர மாட்டோம் என்று அம் மாநில முதல்வர் ஆண்டனி சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் அவர் இதுபோலப் பேசுவது இது இரண்டாவது முறையாகும்.

தேசிய நதிகள் இணைப்புத் திட்டத்தின் கீழ் கேரளத்தின் பம்மா, அச்சன்கோவில் நதிகளை தமிழகத்தின்வைப்பாற்றுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத் திட்டத்தை நிறைவேற்ற விட மாட்டோம் என கடந்தவாரம் தான் சட்டமன்றத்தில் ஆண்டனி தெரிவித்தார்.

இதற்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந் நிலையில் இன்று சட்டமன்றத்தில்பேசிய ஆண்டனி, எக் காரணம் கொண்டும் கேரள நதிகளை தமிழக நதியுடன் இணைக்க விட மாட்டோம்.

இந்திய அரசியல் சட்டப்படி ஒரு மாநிலத்துக்குள் உள்ள நதியை அடுத்த மாநிலமோ, மத்திய அரசோ உரிமைகொண்டாட முடியாது. பம்மாவும் அச்சன்கோவில் நதியும் கேரளத்தின் சொத்துக்கள் இதில் ஒரு துளி நீரைக் கூடதமிழகத்துக்குத் தர முடியாது.

பம்மா, அச்சன்கோவில் நதிகளின் போக்கை மாற்றினால் மத்திய திருவாங்கூர் பகுதி முழுமையாக பாதிக்கப்படும்.சுற்றுச்சூழல் தவிர பொருளாதாரமும் நசிவடையும். மின் உற்பத்தி, பாசனமும் பாதிப்புக்கு உள்ளாகும். நெற்களஞ்சியமான குட்டநாடு, வறண்ட காடாகிவிடும். இப் பகுதியின் காடுகளும் அழியும்.கேரளத்திடம் அதிக நீர் வளம் இருப்பதாகக் கருதுவது தவறு. வரும் ஆண்டுகளில் பெரிய அளவில் தண்ணீர்தட்டுப்பட்டை சந்திக்க உள்ளது கேரளம்.

தமிழகத்துடன் கேரள நதிகள் இணைக்கப்படுவதைத் தடுக்க சட்டம் கொண்டு வருவது குறித்தும் ஆராயப்படும்.இதை பிரதமருக்கும் தேசிய நதிகள் இணைப்புத் திட்டக் குழுவின் தலைவருக்கும் தெரிவித்துவிட்டோம்.

அச்சன்கோவில் நதியை கேரளத்துக்குள் நுழைய விடாமல் (தமிழத்தில் உருவாகி, கேரளத்தில் பாயும் நதி இது)தடுக்க ஹனுமன் கால்வாயில் ஒரு அணையைக் கட்ட தமிழகம் முயல்வதாகத் தெரிகிறது. அதை நாம் தடுக்கமுடியாது. அது தமிழகத்தின் உரிமை. ஆனால், அந்தப் பகுதியில் நீரே இல்லையே. அப்படி இருக்கும்போதுஅணையைக் கட்டி என்ன பயன் உருவாகப் போகிறது என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறோம்.

நதிகள் இணைப்பு குறித்து மாநிலத்தின் நிலையை இறுதி செய்ய வரும் 30ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டந்நடத்தப்படும் என்றார் ஆண்டனி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+