கன மழை: வறட்சியிலிருந்து தப்பின தென் மாவட்டங்கள்- உப்பளங்கள் பெரும் பாதிப்பு
மதுரை:
கேரளாவிலும் தென் மாவட்டங்களிலும் பெய்து வரும் கன மழை காரணமாக தமிழகத்தின் அணைகள் நிரம்பிவருகின்றன. இதனால் தென் மாவட்டங்களில் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் போதுமான தண்ணீர்கிடைத்துள்ளது.
கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தென் மேற்குப் பருவ மழை வலுத்துள்ளது. கேரளத்தை ஒட்டியுள்ளதமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களின்பெரும்பாலான பகுதிகளில் கடந்த 4 நாட்களாக கன மழை பெய்து வருகிறது.
இந்த தொடர் மழை காரணமாக இந்த மாவட்டங்களில் உள்ள அணைகள், கண்மாய்கள், குளங்கள், குட்டைகள்வேகமாக நிரம்பி வருகின்றன. முல்லைப் பெரியாறு, வைகை, சோத்துப்பாறை, மஞ்சளாறு அணை, பெருஞ்சாணி,பேச்சிப்பாறை ஆகிய அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
முல்லைப் பெரியாறு அணையில் தற்போது 114 அடி நீர் உள்ளது. வைகை அணையில் 31 அடி நீர் உள்ளது. இதுமேலும் உயரும் வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக தேனி, மதுரை மாவட்டங்களில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்குத் தேவையான போதுமான நீர்கிடைத்துள்ளதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மழை நீடித்தால் முற்றிலும் வறட்சிநீங்கும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையுடன் சூறாவளிக் காற்றும் வீசுகிறது. இதனால் கடலில் கொந்தளிப்பும்ஏற்பட்டுள்ளது.
இந்தத் தென் மேற்கு பருவ மழை காரணமாக தென் மாவட்டங்கள் பெரும்பாலானவை பயன் பெறும் சூழல்ஏற்பட்டுள்ளது. இருப்பினும் காவிரி டெல்டா மாவட்டங்களில் சொல்லிக் கொள்ளும்படி மழை பெய்யவில்லை.அவை தொடர்ந்து கர்நாடகத்தின் மழையையே நம்பியுள்ளன.
உப்பளங்கள் பாதிப்பு: பல லட்சம் சேதம்
மழையால் ஒரு பக்கம் நன்மை ஏற்பட்டாலும் இன்னொரு புறம் பெரும் நஷ்டமும் ஏற்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக உப்பளங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பலலட்சம் மதிப்புள்ள உப்பு மழை நீரில் கரைந்து போய் விட்டது. மேலும் கரைந்தவண்ணம் உள்ளது.
கடலோர மாவட்டமான கன்னியாகுமரியிலும் தூத்துக்குடியிலும் ஏராளமான உப்பளங்கள் உள்ளன. கோவளம்போன்ற பகுதிகளில் எங்கு பார்த்தாலும் உப்பளங்கள்தான். தற்போது உப்பளங்கள் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே கன மழையால் வடிவேளங்குளம் என்ற இடத்தில் வீடு மீது மரம் முறிந்து விழுந்ததில் வீட்டில்தூங்கிக் கொண்டிருந்த தங்கராஜ் என்பவர் காயமடைந்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications