ஆந்திரா: ரயில் கவிழ்ந்து சாலையில் விழுந்து 17 பேர் பலி
வாரங்கல் (ஆந்திரா):
வாரங்கல் ரயில் நிலையத்தின் அருகே பாலத்தில் சென்று கொண்டிருந்த ரயிலின் என்ஜினும் இரண்டு பெட்டிகளும்கவிழ்ந்து சாலையில் விழுந்தன. இதில் ஆட்டோவில் இருந்த 5 பேரும், ஸ்கூட்டர்களில் சென்ற 4 பேரும்,சாலையில் நடந்து சென்ற 4 பேரும், ரயிலில் இருந்த 4 பேரும் பலியாயினர்.
இந்த அதிர்ச்சிகரமான விபத்துக்கு ரயில் டிரைவரின் தவறே காரணம் என்று கருதப்படுகிறது. இந்த விபத்தில்மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று காலை விஜயவாடாவில் இருந்து ஹைதராபாத் சென்று கொண்டிருந்த கோல்கொண்டா எக்ஸ்பிரஸ் ரயில் 10மணியளவில் வாரங்கல் ரயில் நிலையத்தின் அருகே வந்தது.
அப்போது தான் ரயிலின் பிரேக் செயல்படாதததை டிரைவர் கண்டறிந்தார். இதையடுத்து ரயிலை வாரங்கல் ரயில்நிலையத்தில நிறுத்த முடியாது என்பதை அறிந்த டிரைவர் அதைத் தொடர்ந்து இயக்க முயன்றார். அப்போது சாலைமேல் உள்ள ரயில் பாலத்தில் அந்த ரயில் சென்று கொண்டிருந்தது.
திடீரென வேகம் பிடித்த அந்த ரயிலின் என்ஜின் கழன்று பாலத்தில் இருந்து கீழே விழுந்தது.
இதில் கீழே சென்று கொண்டிருந்த ஆட்டோ, இரு ஸ்கூட்டர்கள் நசுங்கின. ஆட்டோவில் இருந்த 5 பேரும் அந்தஇடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர். ஸ்கூட்டர்களில் இருந்த 4 பேரும் பலியாயினர்.
தொடர்ந்து இரு பெட்டிகளும் கீழே விழுந்தன. இதில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 4 பேர்பலியாயினர். ரயில் பெட்டிகளில் இருந்த 4 பேரும் உடல் நசுங்கி இறந்தனர்.
மேலும் 23க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாகஉள்ளது. நசுங்கிக் கிடக்கும் பெட்டிகளில் மேலும் பல பயணிகள் சிக்கியுள்ளனர். இந்தப் பெட்டிகளை கேஸ்கட்டர்கள் மூலம் உடைத்து பயணிகளை மீட்கும் பணி நடந்து வருகிறது.
என்ஜின் மற்றும் பெட்டிகளின் கீழே பலர் சிக்கியுள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும்அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த விபத்துக்கு டிரைவரின் தவறே காரணமாக இருக்கலாம் என ரயில்வேத்துறை அமைச்சர் நிதிஷ் குமார்கூறியுள்ளார். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள அவர் கூறுகையில், சிக்னலைக் கவனிக்காமல் ரயிலைடிரைவர் இயக்கியுள்ளார். இதனால் தான் விபத்து ஏற்பட்டுள்ளது என்றார்.
ஆனால், ரயிலின் பிரேக் பிடிக்காததால் தான் அதை நிறுத்தாமல் இயக்கியதாக டிரைவர் கூறியுள்ளதாகத்தெரிகிறது.
இதே இடத்தில் 1991ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இதே போன்ற ஒரு விபத்து நடந்துள்ளது. அப்போதும் ரயில்சாலையில் விழுந்தது. 7 பேர் பலியாயினர். இதனால் இந்தப் பாலத்தின் அமைப்பில் ஏதாவது பிரச்சனைஇருக்கலாம் என பொது மக்கள் கூறுகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications