தமிழகத்தில் தொடர்கிறது மழை: அடுத்த 24 மணி நேரத்திற்கு விடாதாம்!
சென்னை:
தமிழகத்தின் வட மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழை அடுத்த 24 மணி நேரத்திற்கு தொடரும் என்றுவானிலை ஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது.
தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களின் சில பகுதிகளில் கடந்த இரு நாட்களாக நல்லமழை பெய்து வருகிறது. சென்னையில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.
இடியுடன் கன மழை பெய்து வருவதால் குடிநீர்ப் பிரச்சினையில் அல்லாடிக் கொண்டிருக்கும் சென்னை மக்கள்பெரு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நேற்றிரவு தாம்பரம், மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 6 செமீ மழை பெய்துள்ளது.நுங்கம்பாக்கத்தில் 2 செமீ மழை பதிவாகியுள்ளது.
அதேபோல, காவிரி டெல்டா மாவட்டங்களிலும் நில்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக தஞ்சாவூர்,நீடாமங்கலம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்றுவானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என்றும் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications