என்னிடம் வைகோ தோற்கவில்லை: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ என்னிடம் தோற்றிடவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

மதிமுகவின் கண்டனப் பொதுக் கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது:

திமுகவும் மதிமுகவும் திராவிட இயக்கம் என்ற வகையில் ஒன்றுபட்டு இயங்க வேண்டும் என்று நான் சொன்னதைவரவேற்று வைகோ தனது கட்சிப் பத்திரிக்கையான சங்கொலியில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

அதில் ஒரு பாரசீகக் கவிதையை உவமையாகக் காட்டியிருக்கிறார்.

தந்தை ஒரு மிகப் பெரிய போர் வீரன். மகனும் பெரும் வீரன். ஆனால், இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளவே இல்லை.

மகனையும் இங்கே வளர்த்தால், பொழுதல்லாம் போரிலேயே கழித்துவிடும் தந்தையைப் பார்த்து மகனும் போர்வீரனாகிவிடுவானோ என்று தாய் அஞ்சினாள். எனவே, மகனை வேறு நாட்டுக்கு அழைத்துச் சென்றுவளர்க்கிறாள்.

ஆனாலும் அவனும் போர் வீரனாகிவிடுகிறான். இருந்தாலும் தந்தையும் மகனும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளவே இல்லை. தந்தையைச் சந்திக்க வேண்டும் என்பற்காய் அந் நாட்டுடன் போரை உருவாக்கி அதற்குச்செல்கிறான் மகன்.

முடிவில் மகனை தந்த வீழ்த்தி விடுகிறார். அதை மகன் இன்பமாய் ஏற்றுக் கொள்கிறான்.

இந்தக் கதையைக் குறிப்பிட்டுள்ள வைகோ, தன்னை அதில் மகனாகவும் என்னை தந்தையாகவும் உவமையாகக்குறிப்பிட்டுள்ளார். அது உவமையாகவே இருக்கட்டும். உண்மையாக வேண்டாம். யாரும் தோற்க வேண்டாம்.

ஒரு மகன் வீரனாக, மண்டிலம் புகழும் வீரனாகத் திகழ வேண்டும் என்றே எந்தத் தந்தையும் விரும்புவான். தன்மகன் அவையத்தில் முந்தியிருக்க வேண்டுமென்று தான் எந்தத் தந்தையும் விரும்புவான்.

வைகோ அவையத்தில் முந்தியிருக்க வேண்டும். புகழோடு இருந்திட வேண்டும். ஆகவே, நான் வைகோவின்உவமையை ஏற்ற மாட்டேன் என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+