For Daily Alerts
Just In
இன்று கிருஷ்ண ஜெயந்தி: ஜெயலலிதா வாழ்த்து
சென்னை:
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி முதல்வர் ஜெயலலிதா மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில்,
பல்வேறு கோலங்களில் பக்தர்களைக் காத்தவர் பரம்பொருள் கிருஷ்ணர். அவரை பல்வேறு ரூபங்களில் மக்கள்கொண்டாடி வருகிறார்கள். கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்பது உள்ளிட்ட பல்வேறு அமுதமொழிகளை மக்களுக்கு அருளிய கிருஷ்ணரை, தமிழ் உலகம் கண்ணன் என்று அழைத்து வணங்கி மகிழ்ந்துவருகிறது.
அத்தகைய கிருஷ்ணர் அவதரித்த நாளை, அன்பு பொலிக, இன்பம் பொலிக, அமைதி பொலிக என்று கூறிவாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.


