சாலை விபத்தில் நீங்கள் கேட்ட பாடல் விஜயசாரதி படுகாயம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சன் டிவியில் நீங்கள் கேட்ட பாடல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வரும் விஜயசாரதி சாலை விபத்தில்படுகாயமடைந்தார்.
அந்தக் கால நடிகர் சசிகுமாரின் மகன் தான் விஜயசாரதி. சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நீங்கள் கேட்டபாடல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இதுதவிர சின்ன பாப்பா, பெரிய பாப்பா நகைச்சுவை தொடரிலும்நடித்து வருகிறார். பவளக் கொடி என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்தார்.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள சுருட்டப்பள்ளி என்ற இடத்தில் நீங்கள் கேட்ட பாடல் நிகழ்ச்சிக்கான ஒளிப்பதிவுநடந்தது. இதில் விஜயசாரதியும் சன் டிவி குழுவினரும் கலந்து கொண்டார்.
பின்னர் அருகில் உள்ள கோனே நீர்வீழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் சென்ற வேன் தலைகுப்புறகவிழ்ந்தது. இதில் விஜயசாரதி உள்ளிட்ட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.












Click it and Unblock the Notifications