வ.து.நடராஜன் அமைச்சராக பதவியேற்றார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அமைச்சரைவயில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அமைச்சர் வ.து.நடராஜன் இன்று காலைபதவியேற்றுக் கொண்டார்.
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகஇருந்த அன்வர் ராஜா நேற்று டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அவர் வகித்து வந்த துறைக்குவ.து.நடராஜன் நியமிக்கப்பட்டார்.
புதிய அமைச்சர் வ.து.நடராஜன் இன்று ஆளுநர் மாளிகையில் நடந்த எளிய நிகழ்ச்சியில் புதியஅமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ராம் மோகன் ராவ் பதவிப்பிரமாணம்மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள் கலந்து கொண்டனர். கடவுள் பெயரால்தமிழில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார் நடராஜன். பத்து மாதங்களுக்கு முன்பு பதவி நீக்கம்செய்யப்பட்ட நடராஜன் தற்போது மீண்டும் அமைச்சராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications