சசிகலாவுடன், ஊட்டியில் ஜெ. ஒரு வாரம் ஓய்வு!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா, தனது தோழி சசிகலாவுடன் நாளை ஊட்டிக்குச் செல்கிறார். அங்கு ஒரு வாரம்ஓய்வு எடுக்கிறார்.
திங்கள்கிழமை காலை 10 மணிக்கு விமானம் மூலம் கோவை செல்லும் ஜெயலலிதா அங்கிருந்துஹெலிகாப்டர் மூலம் ஊட்டி செல்கிறார்.அங்குள்ள தமிழ்நாடு விருந்தினர் இல்லத்தில் இருவரும்தங்குகிறார்கள்.
10ம் தேதி ஊட்டியில் நடைபெறவுள்ள பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாட்டில்ஜெயலலிதா கலந்துகொள்கிறார். பின்னர் 13ம் தேதி நீலகிரி மாவட்ட திட்டப் பணிகளைத் தொடங்கிவைக்கிறார்.
ஒரு வார ஓய்வுக்குப் பின்னர் 14ம் தேதி சென்னை திரும்புகிறார்.












Click it and Unblock the Notifications