For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெளியில் சிரிக்கிறேன், உள்ளுக்குள் அழுகிறேன்: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கடந்த ஒரு வருடமாக வெளியில் சிரித்துக் கொண்டும், உள்ளுக்குள் அழுது கொண்டும் நடமாடிக்கொண்டிருக்கிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

முரசொலியில் அவர் வெளியிட்ட ஒரு அறிக்கையில், முரசொலி மாறன் உடல் நலம் குன்றியிருப்பதுகுறித்து இவ்வாறு அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

கருணாநிதியின் அறிக்கை: கடந்த ஒரு வருடமாக எனக்கும், திமுகவுக்கும் ஏகப்பட்ட பிரச்சினைகள்,சோகங்கள். அவையெல்லாவற்றையும் மீறி வெளியில் சிரித்துக் கொண்டும், உள்ளுக்குள் அழுதுகொண்டும் நடமாடி வருகிறேன்.

ஒரு வாரமா, ஒரு மாதமா? எனது பத்து வயது முதலே, எனது மடியில் போட்டு, தோளில் தூக்கிவளர்த்த மாறனின் உடல் நலக் குறைவால் நான் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். ஆனால் அந்தவேதனையை உள்ளுக்குள் அடக்கிக் கொண்டு கட்சிப் பணியாற்றி வருகிறேன்.

இந்த ஒரு வருடத்திற்குள்தான் எத்தனை பிரச்சினைகள், வேதனைகள், சோகங்கள்? ராணி மேரிக்கல்லூரி விவகாரத்தில் பொய் வழக்குப் போட்டு ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏக்களைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர், தா.கிருட்டிணன் கொலை வழக்கில் மு.க.அழகிரியையும் கைதுசெய்து உள்ளே தள்ளினர், கட்சியில் மீண்டும் இணைந்ததால் கோபமடைந்து, முல்லைவேந்தனைகைது செய்து கொலை செய்யவும் பார்த்தனர், திருச்சியில் பரணிகுமார் எம்.எல்.ஏ. மீது பொய்வழக்கு.

இப்படி கண்களைக் கலங்க வைக்கும் நிகழ்வுகளுக்கு இடையிலும், எனது உடல் நிலை குறித்துக்கவலைப்படாமல், ஊர் ஊராக சென்று தேர்தல் நிதியைப் பெற்று வருகிறேன். இது வெறும் நிதி வசூல்மட்டுமல்ல, தொண்டர்களைக் காண, அவர்களது உழைப்பின் பயனாகக் கிடைத்த அறுவடையைப்பெற வேண்டி மேற்கொள்ளப்பட்ட பயணம்.

இத்தனை இன்னல்களுக்கு மத்தியிலும், ஆங்காங்கே நான் கண்ட எழுச்சியை, விழுப்புரததிலும்காணப் போகிறேன். என் வேதனை, உன் வேதனை கிடக்கட்டும். இந்தத் தமிழ் இனத்தின்வேதனையைத் தீர்க்கும் முதல் வேலை தானே நமக்கு முதன்மையான வேலை. அந்தக் கடைமையைநிறைவேற்ற விழுப்புரத்திற்கு வர வேண்டும் என்று திமுக தொண்டர்களுக்குத் தெரிவித்துள்ளார்கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X